கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவா் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான“கபீர் புரஸ்கார்விருது”ஒவ்வொருஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20000ஃ-, ரூ10000ஃ- மற்றும் ரூ.5000ஃ-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமுதாயநல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் , நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இவ்விருதானது ஒருசாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிறசாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரியகாலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிபாக நிராகரிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர்,அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசிஎண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.