ஆதவ் ரெட்டியை யார் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யார் ? ஆதவ் ரெட்டியை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா ஒரு அமைப்பா அல்லது உதிரியா என்றால் தற்சமயம் ஓர் உதிரிதான்.‌ ஆனால் இந்த மூன்று மாத காலம் விடுதலை சிறுத்தை கட்சியின் தாமத நடவடிக்கையால் அவரை ஓர் ஆளுமையாக உருவாக்கி விட்டார் திருமா.

Sri Kumaran Mini HAll Trichy

ஒரு சாதாரண துணைச் செயலாளருக்கு முக்கால் மணி நேரம் செலவழித்து வீடியோ போடும் அளவிற்கு அவருடைய முக்கியத்துவத்தை தனது கட்சியில் உருவாக்கியதன் மூலம் தமிழகத்தில் ஒரு தலைவர் போல ஆதவ் அர்ஜுன் பேசக்கூடிய அளவிற்கு இன்றைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் திருமா இதன் விளைவை அந்தக் கட்சி அனுபவிக்க நேரும்.

” வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என்று நினைத்தாயோ,” என்று நேற்று அவர் ட்விட் போட்டது யாருக்காக ? திமுகவுக்கா விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கா?

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதே காரியத்தை வன்னி அரசு போன்றவர்கள் செய்திருந்தால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆதவவ் அர்ஜுனா இவ்வளவு முக்கியத்துவம் பெற காரணம் சமூக மட்டத்தில் அவருக்குள்ள பொருளாதாரம் பலம் தான்….

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள ஒரு தலித் உறுப்பினர் அல்லது தலித் பொறுப்பாளர் இந்த அளவு தெனாவட்டாக பேச தைரியம் வரும் என்றா நினைக்கிறீர்கள். வராது பணம் என்பது ஒரு பகாசூர ஆற்றல் வாய்ந்தது என்பதையே அவரது அறிக்கையில் படங்கள் காட்டுகின்றன

Flats in Trichy for Sale

ஆனால் அவரது செயல்பாடுகளினை பார்க்கின்ற பொழுது ஆதவ் அர்ஜுன் எந்த கட்சிக்கு போனாலும் அந்தக் கட்சியை உடைக்கும் அல்லது பங்கம் விளைவிக்கும் ஒரு சக்தியாகவே விளங்குவார் என்பதை நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. விஜய் கட்சிக்கு போனால் நிச்சயம் புஸ்ஸி ஆனந்த் மூன்றாவது கட்டத்திற்கு தள்ளப்படுவார்.

அதிமுகவுக்கு போனால் நாளடைவில் எடப்பாடிக்கு தொல்லை தரக்கூடிய ஒரு நபராகத்தான் விளங்குவார். பன்னீர் செல்வத்தை சமாளித்தது போல ஆதவ் ரெட்டியை சமாளிக்க முடியாது.‌ காரணம் பன்னீர் செல்வம் வாய் வன்மையற்றவர். ‌ஆனால் ஆதவன் ரெட்டி சாதிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வாய்ப்பேச்சு ரீதியாகவும் களப்பணி ஆற்றுவதிலும்  தன்னை முன்னிலை முன்னிலை படடுத்திக் கொள்ளுபவர்.‌

இது அதிமுகவுக்கு நெருக்கடியை தரும் கொஞ்சம் நாள் எந்த கட்சியும் அவரைக் கண்டு கொள்ளாமல் விட்டால் கத்தி கத்தி பார்த்துவிட்டு தானாக அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுவார். அவருக்கு உயிர் கொடுக்க எந்த கட்சி முன் வருகிறதோ அந்தக் கட்சி சேதாரத்தை சந்திக்கும்  ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் நிச்சயம் இன்றைய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு சிறு பகுதியாவது ஆதவ் அர்ஜுனா பக்கத்தில் இந்நேரம் ஆதரவு கரம் நீக்கி கொண்டிருப்பார்கள்…

அப்படி ஒரு சூழல் இல்லாவிட்டால் இப்படி ஒரு டுவிட் போட முடியாது… உரத்த குரலில் பேச முடியாது. வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொள்ள விரும்புபவர்கள் ஆதவ் ரெட்டியை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

ஜெயதேவன்

டிஜிட்டல் படைப்பாளி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.