திமுக மறுசீரமைப்பு என்பது கண்துடைப்பா? புகைச்சலில் புதுக்கோட்டை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

”கழக மறுசீரமைப்பு என்பது கண்துடைப்பா? இல்லை மா.செ. விதிமீறுகிறாரா?” என்பதாக தலைமையிடம் கேள்வி எழுப்புகிறார்கள் புதுக்கோட்டை திமுக தொண்டர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்த சத்திய சீலன் என்பவரை தூக்கிவிட்டு, அவரிடத்தில் பாண்டியன் என்பவரை தலைமை கழகம் நியமித்திருக்கும் நிலையில்தான் இப்படி ஒரு புகைச்சல் புதுக்கோட்டையில்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பண்டியன்
பண்டியன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தலைமை கழகத்தால் தற்போது ஒ.செ.வாக நியமிக்கப்பட்டிருக்கும் பாண்டியன், கடந்த 2019 இல் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டபோது அவரது பிரமாண பத்திரத்தில் தனது வயதை 62 என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் திமுகவில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களில் ஒன்றாக நிர்வாகிகளின் வயது நிர்ணயம் இடம்பெற்றிருந்தது. இதன்படி, ஒன்றிய, நகர், பேரூர் செயலாளர்களுக்கான வயது வரம்பு 60 தான். அதற்கு மேல் போட்டியிடக்கூடாது. ஆனால், 2019 இலேயே 62 வயதை கொண்டவருக்கு, தற்போது 70-ஐ நெருங்கியவருக்கு மா.செ. பதவியா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

விராலிமலை இடைத்தேர்தலை மனதில் வைத்து இப்படி காய் நகர்த்தப்பட்டிருக்கிறதா? சமீபத்திய கட்சி விதியின்படி, அவரது வயது விவரங்கள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? இடைத்தேர்தலையொட்டிய சிண்டிகேட்டின் சூழ்ச்சியா? என கேள்விக்கணைகளை திமுக தலைமையை நோக்கி தொடுத்து வருகிறார்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்.

—       அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.