தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மேமோகிராஃபி பரிசோதனைக்கு 75% கட்டணச் சலுகை அறிவிப்பு.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் (DSU) ‘ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ்’ (School of Allied Health Sciences) – கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பத் துறை சார்பில், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியானது, பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் சி.கே ரஞ்சன் மற்றும் பதிவாளர் டாக்டர்
எஸ் . செல்வகுமார் அவர்களின் ஆலோசனைப்படி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்பகப் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகள், ஆரம்பகால அறிகுறிகள், சுய மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஹர்ஷமித்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், அதற்கான அறிகுறிகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், பெண்கள் தாங்களாகவே செய்து கொள்ளக்கூடிய ‘சுய மார்பகப் பரிசோதனை’ (Self-Breast Examination) குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்களின் உடல்நலப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மேமோகிராஃபி பரிசோதனைக்கு 75% சலுகை: இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்கலைக்கழகத்தின் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மார்பக ஊடுகதிர் பரிசோதனையான ‘மேமோகிராஃபிக்கு’ (Mammography) 75 சதவீதக் கட்டணச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான பெண்கள் சமயபுரம்சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வருகை தந்து பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.
டாக்டர் கே.ரேகா அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்கள் தங்களின் மார்பக நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவதற்கும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பாதுகாப்பான வாழ்வை அமைத்துக்கொள்வதற்கும் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.