அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்கடலில் தாமரை மலர முடியாது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி கன்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு நவாப் என்டோமென்ட் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று (மார்ச்-21 ) நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும், ஆற்காடு நவாப் எண்டோமென்ட் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி பஷீர் அகமது, முஸ்லிம் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் சையது ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த, பேராசிரியர் காதர் மைதீன் “இந்த நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உலகம் மிகக் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளுக்கிடையேயான பதற்றம் உலக மக்களை பாதித்து வருகிறது. இந்த சூழலில் அனைத்து நாடுகளும் அமைதியை முன்னிறுத்த வேண்டும். உலகிற்கு இன்று தேவையானது போர் அல்ல, அமைதிதான்.”

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

“நேற்று வரை நான்கு முனை போட்டியாக இருந்த தேர்தல், தற்போது ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. புதிய கூட்டணிகள் உருவாவவது ஜனநாயக நாட்டில் இயல்பான ஒன்றுதான். இன்னும் பல முனை போட்டிகளாக கூட மாறலாம். யாரும் தேர்தலில் போட்டியிடலாம்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தாமரை மலர முடியாது !“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி மிகவும் வலிமையானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியால் 80%க்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. எனவே, எந்த அளவுக்குப் போட்டி இருந்தாலும், இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம், .

யாவரும் கேளீர்

அ.தி.மு.க. கூட்டணி குறித்து அடிக்கடி டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால்,  இங்கு வந்து கூட்டணி குறித்து தெளிவாக பேசுவதில்லை. இது தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான போட்டியாக மாறி வருகிறது என்பதை காட்டுகிறது.”

“தமிழ்நாட்டில் திராவிட சிந்தனை, தமிழ் பண்பாடு வேரூன்றி உள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு இடமில்லை. ‘தாமரை’ வளருவது குளத்திலும் குட்டையிலும் தான். ஆனால், தமிழ்நாடு ஒரு பெருங்கடல். இந்த தமிழ்கடலில் தாமரை மலர முடியாது.” என்றார்.

—         அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.