கலைமகள் சபா : நீதிமன்றம் அதிரடி !
தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலமாக தீர்வை நோக்கி நகர முடியாமல், பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு வரும் விவகாரங்களுள் ஒன்று கலைமகள் சபா விவகாரம்.
கலைமகள் சபாவுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கவும் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் பதிவுத்துறை உதவி தலைமைப்பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நியமித்து நிர்வகித்து வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையை சேர்ந்த கருப்பணன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில், வழக்கறிஞர்கள் எம்.தமிழரசி, என்.பிரேமலதா ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஏற்கெனவே, சோதனை முயற்சியாக கோவை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை கணக்கிட்டு அவற்றின் சந்தை மதிப்புகளை நிர்ணயித்துள்ள நிலையில், அவற்றை பொது ஏலத்தின் மூலம் விற்பணை செய்வதற்கான பணியை இந்த ஆணையம் மேற்கொள்ளும். இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து, கலைமகள் சபா வின் தனி அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள தினசரி விளம்பர அறிவிப்பில், “கலைமகள் சபாவின் அசையா சொத்துக்கள் பொது ஏலத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஏற்கெனவே கலைமகள் சபாவின் உறுப்பினர்களின் தரவுகள் சபாவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சபாவின் உறுப்பினர்கள் தங்களுடைய தற்போதைய முகவரி, புகைப்படம், மற்றும் தொடர்புடைய மற்ற விவரங்களை மேற்சொன்ன சபாவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு” அழைப்பு விடுத்திருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு
இணையதளம் : http://kalaimagalsabha.in
மின்னஞ்சல் முகவரி : specialofficerkms2022@gmail.com
தொலைபேசி எண்கள் : 9944098552 / 9944098572








Comments are closed, but trackbacks and pingbacks are open.