அட்லீயின் அக்கப்போர்! கலக்கத்தில் கலாநிதி மாறன்!
ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’, தற்போது ரிலீசாகியிருக்கும் ‘கூலி’, அடுத்து ‘ஜெயிலர்-2’ என மெகா பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன், டைரக்டர் அட்லீ காம்பினேஷனில் சயின்ஸ் ஃபிக்ஷன் படமொன்றையும் தயாரிக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ வில்ஸ்மித் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு சம்பளமே 15 நாட்களுக்கு 300 கோடி ரூபாய் என்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு சுழன்றடிக்குது.
ஹீரோ அல்லு அர்ஜுன் சம்பளம், டைரக்டர் அட்லீ சம்பளம், ஹீரோயின் சம்பளம், மற்ற ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள் சம்பளம், டெக்னாலஜிக்கான பட்ஜெட், ஷூட்டிங்கிற்கான பட்ஜெட் என அப்படி இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் 700 கோடிக்கு மேலாகும். ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் அட்லீயின் அக்கப்போரும் ஆரம்பமாகுமே.. இதை எப்படி சமாளித்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணுவது என இப்போதே கலங்கிவிட்டாராம் கலாநிதி மாறன்.
— மதுரை மாறன்