காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகள் அமைச்சர் ஆய்வு
திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி . தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. நிகழ்வின் போது மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் உடன் இருந்தார் மற்றும் கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் வல்லுனர்கள் உடன் இருந்தனர்.