கலைஞரும் காமராஜரும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலைஞரும் காமராஜரும்

♦ காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிடவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் கலைஞர்

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

♦ காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்

♦ சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

♦ சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர்

♦ காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லம் ஆக்கியவர் கலைஞர்

♦ காமராஜரின் உதவியாளராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தி, அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடும் வழங்கினார்

♦ தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் ‘அன்னை சிவகாமி அம்மையார் வளாகம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

♦ சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் திட்டம் கண்டவர் கலைஞர்

♦ சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தந்தார்.

♦ கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர்

♦ நெருக்கடி நிலையின் போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது,என் ஆட்சியை கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்று சொன்னவர்

♦ நாவலர் தலைமையில் நடைபெற்ற தன் மகன் ஸ்டாலின் திருமணத்திற்கு மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து சிறப்பு செய்தவர்

♦ காமராஜர் மறைந்த அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாக தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கி தயார் செய்து தந்தவர் கலைஞர்

#காமராஜர்_பிறந்தநாள்

– A Sivakumar

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.