திருச்சி காவேரி மருத்துவமனையில் – பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம் !

0

திருச்சி காவேரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம். ஜூலை 15 ஆம் தேதி தேசிய பிளாஸ்டிக் சர்ஜரி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது மிகத் தொன்மையான சிறப்பு பிரிவுகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் வெளி நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை பிரிவு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

ஏற்கனவே கை அறுவை சிகிச்சை, மேற்கை நரம்பு பின்னல், புற வெளி நரம்பு காயங்கள், தீக்காயங்கள் தீக்காயத்திற்கு பிந்தைய சிகிச்சை பராமரிப்பு, புற்றுநோய் பாதிப்பு உள்ளானவர்களுக்கான மறு சீரமைப்பு ,பிறவி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 7000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் .

இதற்கான புதிய பிரிவை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன், சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

- Advertisement -

4 bismi svs
பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு
பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு

இந்த புதிய பிரிவு குறித்து காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும் செயலாக்க இயக்குனருமான டாக்டர் செங்குட்டுவன், திருச்சி காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா ஆகியோர் செய்தியாளிடம் கூறும்போது இந்த துறையில் வளர்ச்சி மற்றும் இன்றைய வடிவத்தை எட்டுவதற்கான பயணம் பற்றிய முக்கிய தகவல்களை வழங்கினர்.

பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு
பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு

மிக அதிக அளவிலான இவ்வகை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில் காவேரி மருத்துவமனையின் இத்துறை சிறப்பாக செயலாற்றுகிறது இனி வரும் ஆண்டுகளில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் மற்றும் உலகெங்கிலும் மருத்துவ சுற்றுலா செயல்பாட்டின் வழியாக இச்சேவைகளை விரிவாக்கம் செய்வதும் இப்பிரிவின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைக்கு இந்த கல்வி ஆண்டு முதல் நேஷனல் போர்டில் ( D.N.P )இரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமேட் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு மாநிலத்தில் வழங்கும் தனியார் துறையைச் சேர்ந்த நான்காவது மருத்துவக் கல்வி நிறுவனம் என்ற பெருமையை காவேரி மருத்துவ குழுமம் பெற்றுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.