அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘காந்தாரா சேப்டர்-1’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர். டைரக்‌ஷன் & ஹீரோ : ரிஷப் ஷெட்டி. நடிகர்-நடிகைகள் : ருக்மினி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா. ஒளிப்பதிவு : அரவிந்த் எஸ்.காஷ்யப், இசை : அஜனீஷ் லோக்நாத், எடிட்டிங் : சுரேஷ், ஆர்ட் டைரக்டர் : தரணி கங்கேபுத்ரா, வி.எஃப் எக்ஸ் சூப்பர்வைசர் : கே.வி.சஞ்சித், ஸ்டண்ட் மாஸ்டர்கள் : அர்ஜுன் ராஜ், டோடார் லாசரோவ், ராம் லக்‌ஷ்மண், மகேஷ் மாத்யூ, மிதுன்சிங் ராஜ்புத், நடனம் : புஷன் & ஸ்வராஜ் ஷெட்டி, காஸ்ட்யூம் டிசைனர் : பிரகதி ஷெட்டி,  எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்கள் : ஆதர்ஷ் ஜே.ஏ. & பிரமோத் ஷெட்டி, புரொடக்‌ஷன் டிசைனர் : பாங்க்லான், பி.ஆர்.ஓ: யுவராஜ்.

மன்னர் ஜெயராம் வாழும் அரண்மனையும் அவரால் அடிமைகளானவர்களும்   பகுதி பாங்க்ரா. கடவுள்கள் வாழும் பகுதி காந்தாரா. பிரம்மா ராட்சசர்கள், அதாவது அரக்கர்கள் வாழும் பகுதி கதம்பர்கள் பகுதி. ஒருவரின் எல்லைக்குள் இன்னொருவர் அத்துமீறினால் என்ன விபரீதங்கள், விளைவுகள் குறிப்பாக காந்தாரா பகுதியை அபகரிக்க நினைக்கும் மற்ற இரு கூட்டத்தினருக்கும் ஏற்படும் விளைவுகள் தான் இந்த ‘காந்தாரா சேப்டர்-1’.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

விண்ணைத் தொடும் அழகான மலைப்பகுதியில் ஆர்ட் டைரக்டர்களின் திறமையால் கோடிக்கணக்கில்  உருவாக்கப்பட்ட மலைக்க வைக்கும் பிரமிப்பான,  பிரம்மாண்ட அரண்மனை செட், காந்தாரா மக்களின் குடிசை செட்,  கதம்பர்கள் வசிக்கும் குடிசை செட், இவற்றின் துணையுடன் இந்த மெகாபட்ஜெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

காந்தாரா சேப்டர்-1’ஆனால் படத்தின் இடைவேளை வரையிலான ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் காட்சிகள் எல்லாமே கர்நாடக மாநில வனத்துறையின் உதவியுடனும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் பேருதவியுடனும் மெகா சர்க்கஸ் பார்ப்பது போலத் தான் இருக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“ஆயிரம் வருசத்துக்கு முன்னால ஒரு கல்” என படத்தின் ஆரம்பத்தில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்களே தவிர, என்ன கதைன்னு இடைவேளை வரை சொல்லவேயில்லை. அதனாலேயே மெகா சர்க்கஸ் பார்ப்பது போலாகிவிட்டது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆனால் இடைவேளைக்குப் பின்பு தான் தனது சாகச நடிப்பால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார் நாயகன் ரிஷப் ஷெட்டி. அதிலும் அந்த ‘கல் தெய்வம்’ அவருக்குள் இறங்கிய பின். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு அவதாரம் இருக்கே… அடேங்கப்பா…அபாரம்னு தான் சொல்லணும்.

மன்னராக ஜெயராம், அவரது மகள் இளவரசி கனகவதியாக ருக்மினி வசந்த், மன்னனாக முடிசூட்டப்பட்ட மகனாக குல்ஷன் தேவய்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ஜெயராமும் ருக்மினியும் மட்டுமே நமக்கு நன்கு தெரிந்தவர்கள். மற்ற நடிகர்கள்,  குல்ஷன் தேவய்யா உட்பட எல்லோருமே  கன்னட சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ் ரசிகனிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்கள்.

காந்தாரா: சாப்டர் 1' விமர்சனம்: தவறவிடவே கூடாத வெள்ளித்திரை பிரம்மாண்டம்! | Kantara Chapter 1 review - hindutamil.inகாந்தாரா குழுவின் தலைவன் ரிஷப் ஷெட்டி முதன்முதலாக இரும்பு ஆயுதத்தைப் பார்ப்பதை நுட்பமாக காட்டியிருக்கிறார் டைரக்டர் ரிஷப் ஷெட்டி. அதே போல் இளவரசி ருக்மினியிடம் “நீங்க எல்லை தாண்டி வந்தா அதிகாரம், நாங்க தாண்டி வந்தா பேராசையா” ரிஷப் ஷெட்டி பேசும் வசனம் தான் படத்தின் பேஸிக் ஸ்ட்ரக்சர். க்ளைமாக்ஸில் ருக்மினி வசந்துக்கு முடிவு கட்டும் சீன் பகீர் என்றாகிவிட்டது.

இதை கேமராமேன் அரவிந்த் காஷ்யப், வி.எஃப்.எக்ஸ் வல்லுனர்கள், மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களின் ஆக்‌ஷன் சோரியோகிராப், மியூசிக் டைரக்டர் அஜனீஷ் லோக்நாத்தின் அதிர வைக்கும் பேக்ரவுண்ட் ஸ்கோர் உதவியுடன் இடைவேளைக்குப் பிறகு ஒன்றே கால்மணி நேரம் ஃபுல் எண்டெர்டெய்னராக தந்துள்ளார் டைரக்டர் ரிஷப் ஷெட்டி.

அடித்தட்டு மக்களின் வாழ்விடத்தையும் வளங்களையும் கொள்ளையடிக்கும் தற்போதைய கார்ப்பரேட் கொள்ளையர்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையுடன் முடிச்சுப் போட்டு, அதிகாரவர்க்கத்தின் முடிச்சவிக்கித்தனத்தையும் இந்த காந்தாரா மூலம் நார் நாராக கிழித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இந்த துணிச்சலுக்கு கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் சரிபாதியாக நம்பியிருக்கிறார்.

 

 —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.