அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ள நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இறுதி அஞ்சலிஇந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை தொடர்ந்து, கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

 

—   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.