அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘காந்தா’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘ஸ்பிரிட் மீடியா’ & ‘வேஃபேரர் பிலிம்ஸ்’ ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி. இயக்கம்: செல்வமணி செல்வராஜ். ஆர்டிஸ்ட்: துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி, காயத்ரி சங்கர், ராணா டகுபதி, நிழல்கள் ரவி, பக்ஸ்(எ) பகவதி பெருமாள், ஆடுகளம் நரேன், வையாபுரி, ஜாவா சுந்தரேசன், ரவீந்திர விஜய். கூடுதல் திரைக்கதை – வசனம்: தமிழ் பிரபா, ஒளிப்பதிவு: டேனி சான்செஸ், இசை: ஜாக்ஸ் பிஜாய் & ஜானு சந்தார், எடிட்டிங்: ஆண்டனி கொன்சால்வெஸ், ஆர்ட் டைரக்டர்: ராமலிங்கம், காஸ்ட்யூம்: பூஜிதா டெடிகொண்டா& அர்ச்சனா ராவ், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்

புகழ் பெற்ற ஒரு டைரக்டருக்கும் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு ஹீரோவுக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த ‘காந்தா’. டைரக்டர் அய்யா [ சமுத்திரக்கனி] தனது தாய் சாந்தாவை மையமாக வைத்து ஒரு கதை எழுதி, அதில் ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ டி.எம்.மகாதேவனை[ துல்கர் சல்மான்] ஹீரோவாகப் போட்டு ’சாந்தா’ என்ற டைட்டிலுடன் படத்தை ஆரம்பிக்கிறார். படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்ம் போது, கொலை முயற்சி வழக்கொன்றில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார் டி.எம்.எம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

காந்தாசில மாதங்கள் ஜெயில் வாசத்துக்குப் பின் விடுதலையாகிறார் ஹீரோ. மீண்டும் அதே கதையை அதே ஹீரோவை வைத்து படத்தை ஆரம்பிக்க எண்ணுகிறார் தயாரிப்பாளர் மார்டன் ஸ்டுடியோஸ் மார்ட்டின். ஆனால் டைரக்டர் அய்யாவோ…”அவனை ஹீரோவா வச்சு எடுக்கமாட்டேன்” என மறுக்கிறார். ஆனால் தயாரிப்பாளரோ, தொடர்ச்சியாக 12 படங்கள் ஹிட் கொடுத்த டி.எம்.எம்.மை வைத்து எடுத்தால் தான் காசு சம்பாரிக்க முடியும் என கணக்குப் போட்டு, பெரும்பாடுபட்டு டைரக்டரை சமாதானப்படுத்தி ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறார்.

மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. முதல் ஷாட்டிலேயே ஹீரோவுக்கும் டைரக்டருக்கும் இடையே முட்டல்—மோதல் ஆரம்பிக்கிறது. பத்தாக்குறைக்கு படத்தின் டைட்டிலை ‘காந்தா’ என மாற்றுகிறார் ஹீரோ. இதனால் ரொம்பவே உறுமுகிறார் டைரக்டர். இவர்களின் முட்டல்—மோதல்—உறுமல், பகை உணர்ச்சி, பழிவாங்கும் வெறியாகி, ஹீரோயின் கொலையில் முடிகிறது.

https://www.livyashree.com/

இதன் பின்னணியில் இருக்கும் ஜென்மப்பகை ஆட்டம் தான் இந்த ‘காந்தா’. ”சினிமாத்தனம் இல்லாத சினிமா” என்பார்கள். ஆனால் இந்த காந்தாவோ.. சினிமாவுக்குள் இருக்கும் பக்கா சினிமாத்தனத்தை பக்காவாக ஃபோகஸ் பண்ணியிருக்கிறது. இதற்காக டைரக்டர் செல்வமணி செல்வராஜுக்கு முதலிலேயே ராயல் சல்யூட் அடிப்பது தான் கரெக்டா இருக்கும்.

‘இது எம்.கே.தியாகராஜ பாகவதரின் கதை. எனவே இதை ரிலீஸ் பண்ண தடை விதிக்க வேண்டும்’ என உயர்நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறார் பாகவதரின் பேரன் ஒருவர். நவம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு பார்க்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பாகவதர் பேரன் நினைத்தது போல..இது பாகவதரின் கதை அல்ல என்பது தான் நிஜம். கொலை முயற்சி வழக்கில் ஹீரோ ஜெயிலுக்குப் போவது மட்டும் தான் பாகவதர் கதையின் சாயல் தெரிகிறது. அதே போல் துல்கர் சல்மான்  கழுத்தில் தங்கச் செயின், கைவிரலில் வைர மோதிரம் இதுவும் பாகவதர் ஸ்டைல் போல தெரியலாம். ஆனால் இந்த ‘காந்தா’ முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் கதை. ஏன்னா எம்.ஜி.ஆர்.போல முழுக்கை ஜிப்பா, வேட்டி, கூலிங்கிளாஸ் என அதே பிராண்டுடன் பல சீன்களில் பளிச்சிடுகிறார் டி.எம்.மகாதேவன் [எ] துல்கர் சல்மான்.

காந்தாஆனால் இந்த சங்கதிகளெல்லாம் நேரடியாக தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சந்திரபாபு ஸ்டைல் மீசை வைத்து எம்.ஜி.ஆர்.லவ்வர்ஸுக்கு செமத்தியாக டிமிக்கி கொடுத்திருக்கிறார்கள்: டைரக்டர் செல்வமணி செல்வராஜும் கூடுதல் திரைக்கதை-வசனம் எழுதிய நம்ம ஊரு தமிழ் பிரபாவும்.

எம்.ஜி.ஆரிடம் சிக்கிச் சின்னாபின்னமான பல தயாரிப்பாளர்கள், ஹீரோயின்களின் கதைகள் எல்லாம் நாடறிந்த உண்மை. இதில் முக்கியமானவர்கள் எஸ்.ஏ.அசோகனும் சாண்டோ சின்னப்பா தேவரும். ஒரே ஒரு படத்துடன் அசோகன் சினிமாவிலிருந்தே காணாமல் போனார். ஆனால் தேவரோ…மனசுக்குள் கடுகடுப்பு இருந்தாலும் “முருகா…முருகா…” என சிரித்து சமாளித்தபடியே எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்து படாதபாடுபட்டு சம்பாரித்தவர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த காந்தாவில் தயாரிப்பாளர் தேவருக்குப் பதில் டைரக்டர் அய்யாவாக சமுத்திரக்கனி பின்னிப் பெடெலெடுத்துவிட்டார். அதையும் கூட பிளாக் & ஒயிட் காலத்து தெலுங்கு, இந்தி டைரக்டர்கள் போல தொள தொள பேண்ட், முழுக்கை ஜிப்பா, தோளில் நீளமான சால்வை போட்டு மறைத்து ஜமாய்த்திருக்கிறார் டைரக்டர்.

அனாதையாக இருந்தவனை எடுத்து வளர்த்து நடிப்பு சொல்லிக் கொடுத்து பெரிய ஹீரோவாக்கி, நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்டம் வரக் காரணமாக இருந்த தன்னையே டி.எம்.எம்.உதாசீனப்படுத்த ஆரம்பித்ததும் கோப எரிமலையாய் வெடிக்கும் சீனிலும், “என்னோட கதையும் நான் சொல்லிக் கொடுத்த நடிப்பும் தாண்டா உன்னோட வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம்” என துல்கரிடம் ஆவேசம் காட்டும் சீனிலும் தான் அறிமுகப்படுத்திய ஹீரோயின் குமாரியிடம் [ பாக்ய ஸ்ரீ போர்ஸ்] உருக்கமாக சத்தியம் வாங்கும் சீனிலும் க்ளைமாக்ஸ் சீனிலும் நடிப்பில் கடல் அலையென ஆர்ப்பரிக்கிறார் சமுத்திரக்கனி. இவரின் சினிமா கேரியரில் இந்த ‘காந்தா’ மிகமிக முக்கியமான படம்.

துல்கர் சல்மான். இவரின் நடிப்பைப் பற்றி எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? எந்த சீனைச் சொல்வது? எனத் தெரியவில்லை. படம் முழுக்கவே துல்கரின் ராஜ்ஜியம் தான். காந்தா ஷூட்டிங்கில் மூன்று நிமிடங்கள் பின்னணி இசையே இல்லாமல் சோலோவாக மாஸ்காட்டுவது, சீன் ஆரம்பித்ததும் அந்தக் காலத்து வசனம் பேசும் மாடுலேஷன், போலீஸ் விசாரணையின் போது, சமுத்திரக்கனியிடம் கொந்தளிப்பது, பாக்யஸ்ரீ போர்ஸிடம் உருகுவது, இன்னும் இன்னும் பல சீன்களில் சபாஷ் போட வைக்கிறார் துல்கர்.

காந்தாஹீரோயின் குமாரியாக பாக்யஸ்ரீ போர்ஸ். அடடா…அடடா… பிளாக் & ஒயிட்டிலும் சரி, கேவா கலரிலும் சரி அசாத்தியமான பெர்ஃபாமென்ஸை கொட்டி ரசிகர்களின் மனசுக்குள் போர்ஸாக எண்ட்ரியாகிவிட்டார். “அய்யா சொன்னாத்தான் செய்வேன்” என குருவுக்கு விசுவாசம் காட்டுவதாகட்டும், “பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லையே” என துல்கரிடம் பரிவு காட்டுவதாகட்டும் பாக்ய ஸ்ரீ சக்சஃஸ் ஸ்ரீ.

துல்கரின் மனைவியாக காயத்ரி சங்கருக்கு நான்கைந்து சீன்கள் தான் என்றாலும் அனைத்திலுமே பளிச்சிடுகிறார். இவரின் அப்பா முதலியாராக [ இராமசாமி உடையார்] நிழல்கள் ரவி, துல்கரின் டிரைவர் செல்வமாக வையாபுரி, ஐ.ஜி.யாக ஆடுகளம் நரேன் எல்லோருமே கவனத்தை சிதறடிக்காமல் கவனம் ஈர்ப்பது தான் காந்தாவின் சிறப்பு.

இடைவேளைக்குப் பின் எண்ட்ரியாகும் இன்ஸ்பெக்டர் தேவதாஸாக ராணா டகுபதி. இந்த கேரக்டர் தான் மகா எரிச்சலைக் கிளப்பிவிட்டது. குமாரி கொலைக் கேசை விசாரிக்கும் சீன்களில் ஓவராக உடலை அலட்டி, ஆட்டி,  வசனம் பேசும் மாடுலேஷன் இதெல்லாமே கடுப்பைக் கிளப்பி, பார்வையாளனை டென்ஷனாக்கும். என்ன தான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்னாலும் அதுக்காக இப்படியா படுத்தி எடுக்கிறது டகுபதி?

காந்தாவின் மெகா உழைப்பாளிகள்னா கேமராமேன் டேனி சான்செஸும் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கமும் தான். டைரக்டரின் ஐடியாப்படி படத்தில் காந்தா ஷூட்டிங் சீன்களை 35 எம்.எம். பிளாக் & ஒயிட பிரேமிலும் கதைக்கான சீன்களை 70 எம்.எம். கேவா கலர் பிரேமிலும் மாறிமாறி காட்டி பிரமிக்க வைத்துவிட்டார். இதற்கு செம ஷார்ப்பாக கட்பண்ணி, கட்பண்ணி பெரிதும் உதவியிருக்கார் எடிட்டர் ஆண்டணி கொன்சால்வெஸ். அந்தக் கால ஸ்டியோ செட், கேமரா, ரெக்கார்டர், என ராமலிங்கத்தின் உழைப்பு அபாரம்.   பின்னணி இசையில் ஜாக்ஸ் பிஜாய் செம ஜாய்ஃபுல்லாக வாசித்திருக்கிறார். குறிப்பாக துல்கரும் பாக்யஸ்ரீயும் ஆடும் டான்ஸில் இருவரும் மரமேஜையில் ஆடும் போது அமர்க்களம் பண்ணியிருக்கார் ஜாக்ஸ் பிஜாய்.

படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் கதையை  ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இரண்டு மணி நேரம் 23 நிமிடங்கள்  டெம்போ குறையாமல் ‘காந்தா’ வைக் கொண்டு வந்து நல்ல சினிமா ரசிகர்களின் மனசுக்குள் காந்தமாக ஒட்டிக் கொண்டுவிட்டார் டைரக்டர் செல்வமணி செல்வராஜ்.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.