கார்த்திகேய சிவசேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன் ; எம்பி ஆகப்போவது யார் ?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலங்களவை எம்பியாக உள்ள வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் எம்பி கேபி முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் செயல்பட முடியாத காரணத்தால், இருவரும் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். கேபி முனுசாமிக்கு இன்னும் ஐந்து வருடம் எம்பி பதவிக்கான கால இருப்பதால் கண்டிப்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
மற்றொருபுறம் வைத்திய லிங்கத்திற்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே எம்பி பதவிக்கான கால அவகாசம் இருப்பதால் இவர் எம்எல்ஏ பதவியை வைத்துக்கொண்டு எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு எம்பி தொகுதி காலியாவது உறுதியானதால் அவர்களின் இடத்தில் திமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற கேள்வி திமுகவின் மேல்மட்டத்தில் விவாதப்பொருளாக கிளம்பியுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் திமுகவில் சேர்ந்து இருந்தாலும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்து, ஓ. பன்னீர்செல்வத்திற்கு தேர்தலில் பயத்தை கட்டிய தங்க தமிழ்ச்செல்வன் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கண்டிப்பாக எம்பி பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை அதிமுகவினர் இருவரும் எம்பி பதவியை ராஜினாமா செய்தால். கார்த்திகேய சிவசேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன் இரண்டு பேருமே எம்பி ஆகி விட அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
மேலும் கார்த்திகேய சிவசேனாதிபதியை கொண்டு கொங்கு மண்டலத்தையும், தங்க தமிழ்ச்செல்வனை கொண்டு தென் மண்டலத்தையும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் திமுக இறங்கும் என்று கூறப்படுகிறது.