கையில் மை வைத்து வசியம் செய்து பெண்களை மயக்கிய கார்த்திக்ராஜ்?
கையில் மை வைத்து வசியம் செய்து பெண்களை மயக்கிய கார்த்திக்ராஜ்?
விவாகரத்து பெற்ற இளம்பெண்களை குறி வைத்து அவர்களுடன் நட்பாக பழகி நகைகளை ஆட்டைய போட்ட இராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜ் (எ) கார்த்திக் ஆரோக்யராஜ் என்பவரை மதுரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இது முதல்முறையல்ல; கடந்த மூன்றாண்டுகளாக இதேபோல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பெண்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.
மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மற்றும் அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் தல்லாக்குளம் ஆய்வாளர் பாலமுருகன், அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிரியா மற்றும் போலீசார்கள் போஸ், சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், விருதுநகர், மதுரை, சிவகாசி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இவனை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து இறுதியாக, மதுரை மாட்டுத்தாவனியில் பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள்.
குறைந்தது ஒரு மாசம் ரொம்ப நல்ல பிள்ளை போல பேசிப்பழகுவது. பிறகு, நல்ல பிள்ளை போல காஸ்ட்லி ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் அல்லது பிரபலமான துணிக்கடைகளில் சந்திப்பது. ஆளுக்கும் சூழலுக்கும் தகுந்தது போல, அப்பெண்களை பேசி மயக்கி அவர்களின் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிடுவதை வழக்கமாக்கியிருக்கிறான். இதுபோல, சுருட்டிய நகைகளை விற்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். ஆனால், ஒன்னு. இதுபோல பல பெண்களை ஏமாற்றி நகையைப் பறித்திருந்தாலும், தப்பித்தவறிக்கூட அந்தப் பெண்களின் மீது கை வைத்ததில்லை என்பதை போலீசாரே ஆச்சரியாமாகத்தான் பார்க்கிறார்கள்.
கார்த்திக்ராஜ், சொந்த ஊருக்கு மிக அருகில் எமனேஸ்வரம் என்ற ஊர் அமைந்திருக்கிறது. பெரும்பாலும் கைத்தறி நெசவுத்தொழிலை செய்யும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கே பில்லி, சூனியம், செய்வினை, பெண்களை மயக்குவதற்கு மை தயாரித்து கொடுப்பதற்கு பிரபலமான ஊர் என்கிறார்கள். பெண்களை பார்த்ததும் கை கொடுப்பது போல அவர்கள் கையில் மையைத் தடவித்தான் மயக்கி நகையை அவர்களே கழற்றித் தருவதைப்போல வசியம் செய்திருக்கிறான் என்கிறார்கள் ஒருதரப்பினர். உண்மையில், தமிழகத்தையே கிறுகிறுக்கத்தான் வைத்திருக்கிறான் இந்த கார்த்திக்ராஜ்.
ஷாகுல், படங்கள் : ஆனந்த்.