நூற்றாண்டின் தலைவராக வாழ்ந்தவருக்கு 102வது பிறந்தநாள்! – ஐபெட்டோ வா.அண்ணாமலை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொது வாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம்வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார். 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர். 5 முறை இந்தத் தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சர். இப்படி வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாய் வாழ்ந்தவருக்கு ஜூன் 3 பிறந்தநாள்.

“ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை மறைந்திருந்து பார்த்தால்தான் தெரியும். இந்த உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு” என்று தலைவர் கலைஞருக்கு 44 வயது இருக்கும்போதே பாராட்டிப் பேசி இருக்கிறார் பேரறிஞர் அண்ணா.

Sri Kumaran Mini HAll Trichy

கலிபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் சொன்னார்:

“கலைஞர் கருணாநிதி போல் அத்தனை படைப்புகள் எழுத வேறொருவர் முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது” என்று சொன்னார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கலைஞர் கலைஞர்தான்!

முத்தமிழ் அறிஞா் பிறந்தநாள்
முத்தமிழ் அறிஞா் பிறந்தநாள்

ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளாரே என்ன என்ன செய்துள்ளார். நினைவு கூர்வோம், வாருங்கள்!

புத்தக வடிவில் வெளியிட வாய்ப்பு இல்லாவிடினும் குறள்போல் செய்துள்ள வரலாற்றுச் சாதனைகளை பட்டியலிடுவோம்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த மந்தனம் (இரகசிய) குறிப்பேட்டினை நீக்கினார்.

இறந்து போனால் காடு சேர்ப்பதற்காக முதன் முதலாக குடும்பநல நிதி என்ற பெயரால் ரூ.10 ஆயிரம் உதவிடும் திட்டத்தினை தொடங்கினார். இன்று ரூ.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு முதன் முதலாக மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதத்தினை அமல்படுத்தினார். தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு மத்திய அரசு போல் தேர்வு எழுத வேண்டும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்தபோது சிரித்துக் கொண்டே 10 ஆண்டுகள் முடிந்தால் தேர்வுநிலை, 20 ஆண்டு முடிந்தால் சிறப்புநிலை என்பதை நடைமுறைப்படுத்தினார்.

ஈட்டிய விடுப்பினை பணமாக்கிக்கொள்ளலாம் என்ற அரசாணையினை வெளியிட்டார்.

வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைப்படி ஆசிரியர்கள் நியமனங்களை செய்திட வழிகாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் 52 ஆயிரம் பேரையும் 1.1.2006 முதல் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்தார்.

வரலாற்றில் இடம்பெற வேண்டிய சாதனைகளாகும்.

நியமனத் தடைச் சட்டத்தினை நீக்கினார்.

> 18 மாதம் மருத்துவ விடுப்பினை உடல்நலம் காத்திட வாய்ப்பளித்தார்.

மகப்பேறு விடுப்பினை உயர்த்தினார்.

Flats in Trichy for Sale

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு போனஸா ? என்றார்கள். அவர் காலத்தில்தான் போனஸ் அறிவித்து அமல்படுத்தினார்.

> 2003 ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து பாதுகாத்தவர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ரூ.4000-லிருந்து ஒரு நபர்க்குழு மூலம் ரூ.4500 ஆக்கினார்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவதற்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 P.P.யுடன் அறிவித்தார். இன்று ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆண்டுகாலமாக ஒரு ரூபாய் கூட இடைநிலை ஆசிரியர்களுக்காக நம்மால் பெற முடியவில்லை என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை

அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் தர ஊதியத்தினை உயர்த்தி வழங்கினார்.

இந்தியாவில் கடைசி ஊதியம் பெற்று வந்த தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு – மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து முதல் மாநிலமாக கொண்டு வந்தார்.

பதவி உயர்வு இல்லாத தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு தேர்வுநிலை தர ஊதியம் ரூ.5400 / 5700 என ஆணை பிறப்பித்து 14 ஆண்டுகாலம் பெற்றிட வழிவகுத்துச் சென்றார்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

தந்தை காலத்தில் வழங்கப்பட்டதை மகன் ஆட்சியில் அலுவலர்கள் பறித்திட முனைந்துள்ளார்கள்.

தமிழாசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்திட வழிவகுத்தார்.

முதல்நிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தார்.

பள்ளிக் கல்லூரிகளை தொடர்ந்து தொடங்கி வைத்தார். தரம் உயர்த்தி வந்தார்.

தொடக்கக்கல்வியில் 80 விழுக்காடு பெண் ஆசிரியர்களை நியமனம் செய்தார்.

பட்டியலிட்ட சாதனைகளை எல்லாம் நினைவு கூர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தநாளினை நாமும் நன்றி தெரிவிக்கும் ஆண்டாக கொண்டாடுவோம். போற்றி வணங்குவோம்!

பலரது செயல்களையும் ஒரே காலத்தில் செய்து காட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

தனிப்பட்ட முறையில் தமிழக ஆசிரியர் கூட்டணி அமைப்புக்கு விண்ணப்பித்த 25 நாட்களில் அரசு அங்கீகாரம் அளித்து சங்கங்களின் மத்தியில் தலைநிமிரச் செய்தார் தலைவர் கலைஞர், பேராசிரியர் பெருமகனார் இருவரையும் எந்நாளும் போற்றி வணங்குவோம். நன்றி மலர்களை காணிக்கையாக்குவோம்!

கொள்கையில் சமரசமற்ற போராளியாக வாழ்ந்தவர் கலைஞர் – கலங்கரை விளக்கம்!

 

வா.அண்ணாமலை

தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.