ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த சட்டமன்ற உறுப்பினர்!
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையல் அறை கட்டிடம் திறப்பு விழா மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயின் கலந்து கொண்டார். அப்போது ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் வகுப்பறையில் நேரில் சென்று மாணவ – மாணவியரிடம் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் கேள்விகள் கேட்டது மட்டுமின்றி , சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆசிரியராக மாறி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
மேலும் சரியாக பதில் கூறிய மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார். விழாவிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் ஆசிரியராக மாறி மாணவர்களிடம் கேள்வி கேட்டது மட்டுமின்றி அதற்கான விளக்கத்தையும் கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
— மணிபாரதி