கரூர் மக்களவை தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?
தமிழ்நாடு சட்டமன்றம் – 2026 தேர்தல் களம் கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? கள நிலவரம்
கரூர் மக்களவைக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள்
- வேடசந்தூர்
- அரவக்குறிச்சி
- கரூர்
- கிருஷ்ணராயபுரம் (தனி)
- மணப்பாறை
- விராலிமலை

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த செ.ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 2 முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
வாக்குப் பதிவு விவரங்கள்
காங்கிரசு செ. ஜோதிமணி 5,34,906
அதிமுக கே.ஆர்.எல்.தங்கவேல் 3,68,090
பா.ஜ.க வி.வி. செந்தில்நாதன் 1,02,482
நாதக ரெ. கருப்பையா 87,503
சட்டமன்ற வாரியாக 2021 சட்டமன்றத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்
வேடசந்தூர்
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த ச.காந்திராஜன் வெற்றிப் பெற்றுள்ளார்.

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 1,06,481 காங். – 93,548
அதிமுக – 88,928 அதிமுக – 69,642
அமமுக – 2,041 பாஜக – 18,330
மநீமை – 1,215 நாதக – 1,293
நாதக – 8,495
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 17,553 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 51,312. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 42,236 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
அரவாக்குறிச்சி
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த இரா.இளங்கோ வெற்றிப் பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 93,369 காங். – 87,390
பாஜக – 68,553 அதிமுக – 44,342
அமமுக – 1,599 பாஜக – 19,978
மநீமை – 1,328 நாதக – 8,959
நாதக – 7,188
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 24,816 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 64,320. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 23,070 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அரவாக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
கரூர்
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த வே.செந்தில் பாலாஜி வெற்றிப் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 1,01,757 காங். – 90,149
அதிமுக – 89,309 அதிமுக – 62,577
அமமுக – 953 பாஜக – 20,089
மநீமை – 4,154 நாதக – 1,424
நாதக – 7,316
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 12,448 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 82,666. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 7,483 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணராயபுரம் (தனி)
சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சார்ந்த க.சிவகாம சுந்தரி வெற்றிப் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்.முத்துக்குமார்

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 96,540 காங். – 89,520
அதிமுக – 64,915 அதிமுக – 50,577
அமமுக – 953 பாஜக – 13,595
மநீமை – 4,154 நாதக – 1,317
நாதக – 7,316
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 31,625 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 64,172. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 25,348 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
மணப்பாறை
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேம மக்கள் கட்சி சார்ந்த ப.அப்துல் சமது வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இரா.சந்திரசேகர்

2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
திமுக – 98,077 காங். – 96,224
அதிமுக – 85,834 அதிமுக – 70,796
அமமுக – 10,719 பாஜக – 17,822
மநீமை – 914 நாதக – 2022
நாதக – 19,450
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியைவிட 12,243 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 88,618. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 7,606 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் மணப்பாறை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
விராலிமலை
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுகவைச் சார்ந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் 3ஆவது முறையாக வெற்றிப் பெற்றுள்ளார்.

திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பழனியப்பன்
2021 சட்டமன்ற வாக்கு விவரம் | 2024 மக்களவை வாக்கு விவரம்
அதிமுக – 1,02,179 காங். – 74,998
திமுக – 78,581 அதிமுக – 68,276
அமமுக – 1,228 பாஜக – 11,703
மநீமை – 559 நாதக – 1,743
நாதக – 7,035
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியைவிட 23,598 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில், தற்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக+பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 79,979. மக்களவைத் தேர்தலில் அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகள் 79,979 வாக்குகள். திமுக கூட்டணியை விட அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய கூடுதல் வாக்குள் 4,981.
2026 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
விராலிமலை தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
— ஆதவன்.