அங்குசம் சேனலில் இணைய

தேர்தல் நெருங்கும்போதுதான் கச்சத்தீவு குறித்து அக்கறை வருமா ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”கச்சத் தீவை தாரை வார்த்ததால், இந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினால் தமிழகமீனவர்கள் 800 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது. திமுகஆட்சியில் தேர்தல் காலங்களில் மட்டும் தான் கச்சத் தீவு பிரச்சனை திமுகவிற்கு ஞாபகத்துக்கு வரும்” என்பதாக, அதிமுக மருத்துவரணி  இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றச்சாட்டியிருக்கிறார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறியதாவது, ”ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத் தீவு குறித்து பேசினார். அதில், தமிழக மீனவர்கள் என்றால் இளக்காரமா? என்று பேசி இருப்பது திமுக ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்கத்தான் பேசியதாக மீனவ மக்கள் கூறுகிறார்கள்.

இந்த கச்சத்தீவு எல்லை என்பது 285 ஏக்கர் ஆகும். ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தூரம் உள்ளது. 1974- க்கு முன்பு தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தான் ஓய்வெடுத்து வந்தார்கள். கச்சத் தீவு கடந்த 1974 ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரவாக்கப்பட்டது. அப்போதுதான்புரட்சித்தலைவர் கருணாநிதி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஊழல் வழக்கிலிருந்து தான் தப்பிக்க மறைமுகமாக இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார் கருணாநிதி.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கலைஞர் மு. கருணாநிதி
கலைஞர் மு. கருணாநிதி

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மேலும், 21.8.1974 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு வலிமை இல்லாத தீர்மானத்தை கூட கண்துடைப்பாக நிறைவேற்றினார். இதுகுறித்து அப்போது புரட்சித்தலைவர் கடுமையாக குற்றம்சாட்டினார். தற்போது இந்த 20 ஆண்டுகளில் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல 6500 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு 1300 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. கச்சத் தீவு குறித்து தற்போது முதலமைச்சர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். 1996 முதல் 2013 வரை நடுவில் 13 மாதங்களை தவிர 17ஆண்டுகள் மத்திய அரசிடம் திமுக அங்கம்வகித்தது. திமுக தயவில்தான் மத்திய அரசு இருந்தது என்று அப்போது கருணாநிதி மார்தட்டினார். கேட்டதுறைகளை அப்போது காங்கிரஸ் கொடுக்க மறுத்தபோது அப்போது மறைமுகமாக ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று மிரட்டினர். உடனடியாக, கேட்ட துறைகள் எல்லாம் அப்போது வாரி வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே, மீனவ மக்களிடத்தில் அக்கறை இருந்திருந்தால் அப்பொழுது கச்சத் தீவை மீட்கஉறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறினால்தான் நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம் என்று திமுக கூறியதுண்டா? இதற்கெல்லாம் மேலாக 2008 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா எதிர்க்கட்சியாக  இருந்த பொழுது உச்சநீதிமன்றத்தில் கச்சத் தீவை மீட்க வழக்கு தொடுத்தார்.

அதற்கு பதில் அளிக்க மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விட்ட போது கருணாநிதி என்ன செய்தார் என்றால் மத்திய அரசு என்ன தாக்கல் செய்வதை பார்த்து தான் மாநில அரசு தாக்கல் செய்யும் என்று கூறினார். ஆனால், மத்திய அரசு கச்சத்தீவு மீட்க முடியாது என்றுகூறியது. அதேபோல, திமுக அரசும் கூறியது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? அப்படி என்றால், மீனவர்கள் உங்களுக்கு இளக்காரமாக தெரிந்துவிட்டார்களா? அதனை தொடர்ந்து மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தது. அப்போது அந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறையும் இணைத்தார். மேலும், புரட்சித்தலைவி அம்மாவும் எடப்பாடியாரும் முதலமைச்சராக இருந்த காலங்களில், தொடர்ந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மு. க. ஸ்டாலின் (M. K. Stalin)
மு. க. ஸ்டாலின் (M. K. Stalin)

இதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூட கூறிவருகிறார்கள்.இலங்கையில் இனப்படுகொலை முடிந்த பின்பு கனிமொழி , டிஆர்.பாலு தலைமையில் அப்போது ஒரு குழு இலங்கைக்கு சென்றது. அப்போது, ராஜபட்சேவிடம் பரிசு பொருள்களை வாங்கிய கனிமொழி கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கே தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பரிசு பொருள் வாங்கிய அக்கறை தமிழக மக்களுக்காக குரல்கொடுத்தாரா? ஒவ்வொரு தேர்தல் காலங்களில் மட்டும் தான் திமுகவிற்கு கச்சத் தீவு பிரச்சனை ஞாபகத்துக்கு வரும். தற்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், தற்போது ஸ்டாலின் ஞாபகத்திற்கு வந்துள்ளது.

தப்பு செய்தது நீங்கள். தற்போது அந்த தப்பை மறைப்பதற்காக மக்களிடம் நீலி கண்ணீர் வடிப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அப்போது கச்சத் தீவை மீட்க  நடவடிக்கை மேற்கொள்வார்” என கூறினார்.

 

 —  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.