அங்குசம் பார்வையில் ‘காத்துவாக்குல ஒரு காதல்’   

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘சென்னை புரொடக்‌ஷன்ஸ்’ எழில் இனியன், இணைத் தயாரிப்பு : ராஜாத்தி எழில் இனியன், டைரக்‌ஷன் & ஹீரோ : மாஸ் ரவி, மற்ற நடிகர்-நடிகைகள் : லட்சுமி பிரியா, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, மேனாக்ஸா, ‘ஜெய்பீம்’ மொசக்குட்டி, ஒளிப்பதிவு : ராஜதுரை & சுபாஷ் மணியன், இசை : ஜி.கே.வி & மிக்கின், எடிட்டிங் : கம்பம் மூர்த்தி, ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன், பி.ஆர்.ஓ. :இரா.குமரேசன்.

தலைப்பைப் பார்த்ததும்  ஏதோ தனித்துவமான காதல் கதையாகத் தான் இருக்கும், மனசுக்கும் இதமாக இருக்கும்னு பெரிய நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த முதல் சீனிலேயே ஒரு ஆக்சிடெண்ட்ல ஹீரோ மாஸ் ரவி செத்துப் போறாரு. சரி, ஃப்ளாஷ்பேக்ல ஸ்வீட்டான லவ் மேட்டர் ஸ்டார்ட்டாகும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்னு நம்புனோம். ஆனா அதுக்குப் பிறகு…

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

‘காத்துவாக்குல ஒரு காதல்’   மாஸ் ரவியும் ஹீரோயின் லட்சுமி பிரியாவும் இரண்டு வரி டூயட் பாடுகிறார்கள். அது முடிந்ததும் ரவுடிகள் கும்பல் நான்கைந்து பேரை வெட்டிச் சாய்க்கிறார்கள். அதுக்குப்பிறகு ஹீரோவும் ஹீரோயினும் நான்கு வரி டூயட் பாடுகிறார்கள். அது முடிந்ததும் நாற்பது ஐம்பது ரவுடிகள் வெட்டிக்கிட்டு சாகிறார்கள். இப்படியே இடைவேளை வரை நாலு வரி டூயட், நாலு பேருக்கு கத்திக்குத்துன்னு நம்மள கொலையா கொன்னுட்டாய்ங்க. சரி, தொலைஞ்சு போங்கடா, இடைவேளைக்குப் பிறகாவது படத்தை ஆரம்பிக்கப் போறாய்ங்கன்னு பார்த்தா.. அதுக்குப் பிறகு படம் பார்க்கும் ரசிகனுக்கு சரமாரியா கத்திக் குத்து விழுகாதது தான் பாக்கி.

”ரவி என்ற பேருக்கு முன்னால ‘மாஸ்’னு போட்டுக்கிட்டா.. நீ பெரிய மாஸ் ஹீரோவா ஆகிருவேண்ணே” எடுவட்டபயலுக சொல்லிருப்பாய்ங்க போல. ரவியும் மாஸ் போட்டுக்கிட்டு நம்மள மண்டை காயவச்சு பாடாபடுத்திட்டாரு. இடைவேளை விடுறதுக்குள்ளேயே பெரிய ரவுடி சூப்பர் சுப்பராயனில் ஆரம்பித்து அல்லு சில்லு ரவுடிகள் அம்புட்டுப் பேரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டிக்கிட்டு செத்துப் போயிரான். அப்புறம் எப்படிய்யா கதை போகும்னு நினைச்சா… கதை கந்தர்கோலமாகி, நமக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். ஏன்னா ஹீரோ மாஸ் ரவி செத்துட்டாரா? சாகலையான்னு படம் முடிஞ்ச பிறகும் நமக்கு விளங்கலேன்னா பார்த்துக்கங்க. படத்துல கொஞ்சமே கொஞ்சமாச்சும் ஆறுதல்னா, அது ஹீரோயின் லட்சுமி பிரியா தான். புள்ள பார்க்க பாந்தமாவும் லட்சணமாவும் இருக்கு . நல்லாவும் நடிச்சிருக்கு. ஆனா என்ன பிரயோஜனம்.. மாஸ் ரவிகிட்டல மாட்டிக்கிருச்சு. இனிமேயாச்சும் பார்த்து சூதானமா இருந்துக்கத்தா.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

     —      மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.