கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி

தன்னம்பிக்கைத் தொடர் - 1 - முனைவர் ஜா.சலேத்,

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது!”- தலாய்லாமா

ஒரு கோணிப்பை நிறைய கற்களை அள்ளிப் போட்டுக்கட்டி, தன் தோளில் சுமந்தபடி தினம்தோறும் ஊரைச்சுற்றி வந்தான் அந்த மனிதன் பார்த்தவர்கள் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். அவன் மனைவிக்கும் அவனது இந்தச் செயல் பிடிக்காததால், அந்த மூட்டையை இரவோடு இரவாக அப்புறப்படுத்த நினைத்தாள். ஆனால், அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

Sri Kumaran Mini HAll Trichy

கோபமாகக் கத்தும் அவன் மனைவியிடம் அவன் சொல்வது ஒன்று மட்டுமே. “தலாய்லாமா வழியாக எனக்குக் கிடைத்த அந்த ஒற்றை வாக்கியமே எனக்கான மந்திரச் சொல். அதன்படியே இயங்குகிறேன்… இனியும் இயங்குவேன்” என்பான்.

எவெரஸ்ட் சிகரம்
எவெரஸ்ட் சிகரம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவனுடைய அந்த உறுதியின் முடிவு அவனை எங்கு கொண்டுபோய் நிறுத்தியது தெரியுமா? 1953 ஆம் வருடம் மே. 29 ஆம் நாள் பகல் 11.30 மணிக்கு எட்மண்ட் ஃகில்லாரியுடன் இணைந்து எவெரஸ்ட் சிகரத்தின் உச்சியில் நிறுத்தியது. இமயமலை அடிவாரத்தில் இருக்கும் கும்சிங் எனும் குக்கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பதினோராவது குழந்தையான அவன், தன் மகள் ஆசையுடன் கொடுத்தனுப்பிய சின்னஞ்சிறு பென்சிலை எவரெஸ்ட்டின் உச்சத்தில் நட்டுவைத்தான் கல்வியறிவில்லாத, வசதியில்லாத எவ்விதப் பயிற்சியும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்த அவன் பெயர் டென்சிங்

தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது. இது உலக வரலாற்றில் அறியப்பட்ட ஆளுமையின் வரலாறு. இதைப்போன்ற பீகாரின் தேஷ்ரத் மான்ஜ்ஹி என்னும் ஆளுமையை நம்மில் பலர் அறியாமலே இருந்திருக்கிறோம். அவர் பற்றிய இந்தப்பதிவு நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

தேஷ்ரத் மான்ஜ்ஹி

“பக்கத்து குன்றில் ஏறி தண்ணீர் எடுக்கச் சென்ற உன் மனைவி தவறி விழுந்து படுகாயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் தேஷ்ரத்!” என்றபோது அந்த ஏழைத் தொழிலாளியின் தலையில் இடி விழுந்தமாதிரி இருந்தது.

கதறிக்கொண்டு ஒடினார். படு காயங்களோடு கிடந்த தன் மனைவியை அள்ளி எடுத்து மருத்துவமனைக்கு வண்டியைக் கட்டினார்.

Flats in Trichy for Sale

அந்தக் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல குன்றுகளின் பாதையில் ஏறி இறங்கி 60 கிலோமீட்டர் பயணித்தாக வேண்டும். வழி இல்லாமல் மனசு நிறைய  நம்பிக்கையோடு மனையியோடும் சில ஊர்க்கரார்களோடும் கிளம்பினார். துரதிஷ்டம் போகும் வழியிலே மனைவியின் உயிர் பிரிந்தது.

தேஷ்ரத் மான்ஜ்ஹி
தேஷ்ரத் மான்ஜ்ஹி

துடிதுடித்து நின்ற அந்தத் தொழிலாளியின் பெயர் தேஷ்ரத் மான்ஜ்ஹி, பீகார் மாநிலம் கயா மாவட்டம் கேய்க்லூரைச் சேர்ந்தவர். முஸாகர் எனும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் சிறுவயதில் தான்பத் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்த இவர், ஃபல்குனி தேவி என்ற பெண்ணுடன் திருமணமான பிறகு சொந்த கிராமத்திலேயே தங்கிவிட்டார். சாலை வசதி சரியாக இல்லாத அந்தக் கிராமம் என்பது சுற்றி மலை குன்றுகளால் ஆனது. அருகில் உள்ள நகரமான வாசிர்கன்ஜ் பகுதிக்கு செல்லவே பல கிலோமீட்டர் மலைப்பாதையில் ஏறி இறங்கியே சென்றாக வேண்டும். தன் கிராமத்தில் விவசாயம் செய்து வந்த தேஷ்ரத். அதை வெளியூர்களுக்கு சென்று வியாரபாரம் செய்து வந்தார்.

மனைவிக்கான இறுதிக்காரியங்களைச் செய்த அவரின் உள்ளத்தில் ஏதோ குத்தத் தொடங்கியது. தன் மனைவியை மருத்துவமனைக்கு உடனடியாகக் கூட்டிச்செல்ல முடியாததுதானே அவர் சாவுக்குக் காரணம் என உணர்ந்தார். இந்தக் குன்றின் வழியாக பாதை இருந்தால் மருத்துவமனைக்கு விரைவில் சென்று இருக்கலாமே! என்கிற எண்ணம் முகிழ்க்கத் தொடங்கியது.

தேஷ்ரத் மான்ஜ்ஹி“என்ன செய்யலாம்?” என சிந்தித்த அவரின் எண்ணத்திற்குள் அவரின் சிறுவயது சுரங்கத் தொழிற்சாலை சுத்தியல் வந்துபோனது. வெறும் உளியையும் சுத்தியலையும் வைத்து மலை உடைக்க கிளம்பினார். 1960ம் ஆண்டு அந்த வேலையை த் தொடங்கியபோது, மக்கள் பலர் இவர் பைத்தியம் என கூறியுள்ளனர். ஆனால் இவர் அதை பொருட்படுத்தாமல் அந்த மலையை தொடர்ந்து உடைத்துக்கொண்டேயிருந்தார். சில நாளில் இதை விட்டு விட்டுவேலைய பார்ப்பார் என்றே நினைத்தனர். ஆனால் தினமும் சில மணி நேரம் மலையை உடைக்கும் பணியைச் செய்தார் தன் வேலை நேரம் போக மற்ற எல்லா நேரமும் மலையை உடைக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டார்.

தொடர்ந்து 22 ஆண்டுகள் முயற்சி செய்து 1982ம் ஆண்டு 110 மீட்டர் நீளம், 7.7 மீட்டர் உயரம் 9.1 மீட்டர் அகலத்தில் ஒரு பாதை உருவாக்கி விட்டார். தனி ஆளாக இவர் அதை செய்து முடித்தார் யாரெல்லாம் இவர் இந்த வேலையைத் தொடங்கும்போது எள்ளி நகையாடினார்களோ, அவர்களே இவரைப் பாராட்டி இவரை உலகறியச் செய்தனர்.

தேஷ்ரத் மான்ஜ்ஹிஇவரது கிராமத்திற்கும் வாசிர்கன்ஜ் பகுதிக்கும் இடையே குன்றைச் சுற்றி சுமார் 55 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய தூரம் வெறும் 15 கி.மீ மாறியது. இவரது கடின உழைப்பும் புகழும் பரவி “மவுண்டைன் மேன்” என அழைக்கப்படத் தொடக்கினார். 2007ம் ஆண்டு இவருக்கு வயிற்றில் கேன்சர் நோய் ஏற்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே இறந்துபோனார். இவரது மறைவிற்கு பீகார் மாநில அரசு, அரசு மரியாதை செய்தது. இவரது உழைப்பை பீகார் மாநில அரசு 2016ம் ஆண்டுதான் கவுரவித்தது. அதே ஆண்டில் இவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை இந்திய தபால் துறை வெளியிட்டது.

ஆம் நாமும் ஒருமுறை கொஞ்சம் குரல் உயர்த்திச் சொல்லலாம்… சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.

முனைவர் ஜா.சலேத்
முனைவர் ஜா.சலேத்

— முனைவர் ஜா.சலேத், கட்டுரையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.