அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மணமணக்கும் கேரளா மத்திமீன் குழம்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க

கேரளா மத்தி மீன் குழம்பு எப்படி செய்வது என்று தெரியுமா? கேரளாவில் மீன் குழம்பு என்பது மிகவும் பேமஸ். மீன் ஃபிரைக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும் கேரள மாநிலத்தில் பொதுவாக பலரும் விரும்புவது மீன் குழம்பைத்தான். குழம்பில் போட்ட மீனுக்குத்தான் சுவை அதிகமாம். தேங்காய் எண்ணெய், குடம்புளி இவை இரண்டும் தான் இந்த கேரள மீன் குழம்பின் ஸ்பெஷல். வாங்க.. கேரளா ஸ்பெஷல் மணமணக்கும் மத்திமீன் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம். மத்தி மீனில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன. 100 கிராம் மத்திமீனில் 25.4 கிராம் புரோட்டீன் சத்து, 7.8 கிராம் கொழுப்பு, 60 கிராம் மத்தியில் 217 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, செலீனியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் பி 12 என ஏராளமான சத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மத்திமீன்
மத்திமீன்

அப்புறம் என்ன ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரத்தில் ருசியான இந்த மத்திமீன் குழம்பை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும், அன்புக் கணவருக்கும் சமைத்துக் கொடுத்து அசத்துங்க..

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தேவையான பொருட்கள்:

மத்தி மீன் – அரை கிலோ, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 3, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மல்லி தூள் – 3 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் விழுது – 50 கிராம், குடம்புளி கரைசல் – 50 கிராம், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும். பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தழை சேர்த்து நன்றாக வதக்கவும். முக்கிய பொருளான குடம்புளிக் கரைசல் மற்றும் தேங்காய் விழுதும், குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொத்திக வைக்கவும். குழம்பு நன்றாக கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து ஒருமுறை கிளறிவிடவும். பத்து முதல் 15 நிமிடம் வேகவிட்டால் சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி. இந்த அருமையான மத்தி மீன் குழம்பை செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறவும்!

 

—    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.