கெத்து தினேஷ் நடிப்பில், 28 நாட்களில் ரெடியான “கருப்பு பல்சர்”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Yasho Entertainment பேனரில் Dr. சத்யா. M. தயாரிப்பில், ‘கெத்து’ தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள படம் ‘கருப்பு பல்சர்’. படப்பிடிப்பு  முழுமையாக முடிந்து, தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதற்கான பணிகள்  நடந்து வருகிறது.

இயக்குநர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில்  திரைக்கதையிலும் பணியாற்றியவர் முரளி கிரிஷ்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“கருப்பு பல்சர்” மதுரையில் கருப்புக் காளையுடன் வாழும் ஒரு இளைஞன்,  சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை.  அசத்தலான காமெடி, பரபர திருப்பங்கள் என  அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக  உருவாகியுள்ளது.

படம் குறித்து இயக்குநர்  முரளி கிரிஷ்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“இதுவரையில் தமிழில் மிகச்சிறந்த இரட்டை வேடப் படங்கள் பல வந்திருக்கிறது. இந்தப்படம் அந்தப்படங்கள் போல இருக்காது.  மக்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக இருக்கும்.  ‘பொல்லவாதவன்’ பட கருப்பு பல்சர், ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த இரண்டும் தான் படத்தின் கரு உருவாகக் காரணமாக இருந்தது. மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை படத்தில் லைவ்வாக காட்டியுள்ளோம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

“கருப்பு பல்சர்” விரைவில்இந்தக் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் தினேஷ். படத்தில் அவரின் உழைப்பு அபாரமானது. இரண்டு நாட்கள்  ஜல்லிக்கட்டில் உண்மையாகவே மாடுகளைப் பிடித்தார். அப்போது அவருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் நடித்துத் தந்தார். சென்னை இளைஞனாகவும் கலக்கியிருக்கிறார். சென்னை, மதுரையில் 28 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். லப்பர் பந்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப்படம் இருக்கும்” என்கிறார் .

“கருப்பு பல்சர்” விரைவில்தினேஷுக்கு  ஜோடிகளாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளன்ர். இவர்களுடன், மன்சூர் அலிகான், கலையரசன் , சரவண சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர்  ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இன்பராஜ் ராஜேந்திரன் பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு, T.உதயகுமார் சவுண்ட் டிசைன், நிர்வாக தயாரிப்பு: கே.வி.தமிழரசு, முருகானந்தம். பி.ஆர்.ஓ.: தியாகராஜன் & மணி. விரைவில் படத்தின் டிரெய்லர், மற்றும் இசை வெளியீடு நடக்கலாம்.

 

—   மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.