அங்குசம் பார்வையில் ‘குஷி’.
அங்குசம் பார்வையில் ‘குஷி’.
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னேனி & ஒய்.ரவிசங்கர். டைரக்டர்: ஷிவா நிர்வானா. ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஜய் தேவரகொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, லட்சுமி, சச்சின் கடேஹர். டெக்னீஷியன்கள்: இசை: ஹேசம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவு: முரளி.ஜி, எடிட்டிங்: பிரவீன் புடி. பி.ஆர்.ஓ: யுவராஜ்.
பிஎஸ்என்எல் வேலைக்கு இண்டர்வியூ காஷ்மீரில் போஸ்டிங் போடுமாறு மேலதிகாரி ரோகிணியிடம் விரும்பிக் கேட்டுச் செல்கிறார் விஜய் தேவரகொண்டா. காஷ்மீரில் போய் இறங்கி பனிமலைப் பாதையில் ஜீப்பில் போது, அவரது மனசுக்குள் ஜில் மழை பொழிகிறது. திடீரென பயங்கரமாக குண்டு வெடிக்கிறது. தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடுகிறதைப் பார்த்து விஜய் தேவரகொண்டாவுக்கு சப்த நாடியும் ஒடுங்குகிறது.
அதன் பின்னர் அங்கிருக்கும் ஒரு வார ஊரடங்கால் சாப்பாட்டுக்கே அல்லாடுகிறார். காஷ்மீர் இவ்வளவு கொடூரமான ரத்த பூமியா என நொந்து போய், டால் ஏரியில் போகும் போது, ” காஷ்மீரை பீஸ்ஃபுல் பூமியா காட்டிய மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளணும்” என புலம்பிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு படகில் தனது தோழியுடன் வரும் சமந்தாவைப் பார்த்ததும் மனசுக்குள் காதல் பூ பூக்குது. பர்தா அணிந்த சமந்தாவை பேகம் என அழைத்து அவர் பின்னாலேயே அலைகிறார் வி.தே. பாகிஸ்தானில் இருந்து தப்பி வந்த தனது தம்பி ஃபெரோஸ் கானைத் தேடி வந்ததாக சொல்கிறார் சமந்தா. இதனால் சமந்தாவையும் அவரது தோழியையும் தனது டெலிபோன் எக்சேஞ்சில் தங்க வைத்து ஃபெரோஸை தேடுகிறார்
வி.தே. திடீரென ஒரு நாள் சமந்தாவும் அவரது தோழியையும் கம்பி நீட்ட, அவர்களைத் தேடி ரயில்வே ஸ்டேஷன் ஓடுகிறார் வி.தே. அப்போது தான் வி.தே.வுக்கு தெரிகிறது சமந்தாவின் பெயர் பேகம் இல்லை, ஆராத்யா, சொந்த ஊர் திருச்செந்தூர் என தெரிகிறது. இருவருக்குள்ளும் அன்பும் காதலும் ஸ்ட்ராங் ஆகும் போது, வி.தே.வின் அப்பா லெனின் சத்யம் ( சச்சின் கடேஹர்) நாடறிந்த நாத்திகவாதி என்பது சமந்தாவுக்கும் படு தீவிர கடவுள் பக்தரான சத்ரங்கம் சீனிவாசராவ் (முரளி சர்மா)தான் சமந்தாவின் அப்பா என்பது வி.தே.வுக்கும் தெரிகிறது.
இந்த நாத்திகம் —ஆத்திகம் பிரச்சினை லவ்வுக்கு பிரச்சினையாகிறது. வி.தே.வின் ஜாதகத்தில் பெரிய தோஷம் இருப்பதால் தன்னோட பொண்ணு வாழ்க்கை நிம்மதியா இருக்காது. அதனால தோஷம் நீங்க ஒரு ஹோமம் நடத்தணும். அந்த ஹோமத்தில் அப்பாவும் மகனும் உட்காரணும் என்கிறார் சீனிவாசராவ். போய்யா நீயும் உன்னோட ஹோமமும் என கடுப்பாகி யார் லெனின் சத்யம். இதனால் வீட்டைவிட்டு கிளம்புகிறார்கள் வி.தே.வும் சமந்தாவும். அதன் பிறகு அவர்களின் திருமண வாழ்க்கை குஷியாக போச்சா, குத்து வெட்டு ஆச்சா என்பது தான் இந்த ‘குஷி’.
நம்ம. அடேங்கப்பா… லவ் எபிசோடுக்கென்றே அளவு எடுத்து தைத்த பேண்ட் & சர்ட் மாதிரி செமத்தியாக இருக்கார் விஜய் தேவரகொண்டா. நிஜத்திலும் கவலைக்குரிய உடல் நிலை உள்ள சமந்தாவின் சோகமும் திரையிலும் தெரிவது பரிதாபமாகத் தான் இருக்கு. இருந்தாலும் தனது பெர்ஃபாமென்சால் பல சீன்களில் தூள் கிளப்பிவிட்டார்.
புருசனுக்கு பயந்து லேப் டாப் ஸ்கிரீனில் இருக்கும் சாமி போட்டோவுக்கு தீபாராதனை காட்டும் வி.தே.வின் அம்மா சரண்யா பொன்வண்ணன். சமந்தாவின் அப்பா முரளி சர்மா சபாஷ் சர்மா. படத்துக்கு தமிழ் வசனம் எழுதிய சகோதரனுக்கு டபுள் சபாஷ் போடலாம். பொதுவாகவே லவ் சினிமாக்களில் சாதி, மதம், இனம், அந்தஸ்து இதெல்லாம் குறுக்கே வந்து கூறுபோடும்.
ஆனால் இந்த குஷியில் நாத்திகக் தையும் ஆத்திரத்தையும் கடைசி வரை கரெக்டா, கவனமா மெயிண்டெய்ன் பண்ணி, க்ளைமாக்ஸில் மனிதம் காப்போம் என்பதை நச்சுன்னு போட்டுத் தாக்குகிறார் டைரக்டர் ஷிவா நிர்வானா. ‘ஹலோ டைரக்டர் காரு நீரு நின்னுட்டே காரு’. கிறிஸ்தவ தம்பதிகளான ஜெயராம் – ரோகிணி எபிசோட் கண்கள் கலங்க இதயம் இளகுகிறது.
குஷியில் ரொம்ப ரொம்ப குஷியாக உழைத்து அசத்தியவர்கள் மியூசிக் டைரக்டர் அப்துல் வஹாப்பும் கேமரா மேன் முரளியும் தான். இரண்டு மணி நேரம் நாற்பத்தி ஐந்து நிமிடம் படம் ஓடினாலும் ரசிகனுக்குள் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது இந்த ‘குஷி’.
–