சிறுவனுக்கு வன்கொடுமை! குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்!
விருதுநகர் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் உட்கோட்டம், மேற்கு காவல் நிலைய சரகத்தில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருச்சுழி உடைய சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வம் (28) மீது, சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீசார் எதிரி செல்வத்தை கைது செய்து, நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இவர் இதுபோன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் செல்வம் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குற்றவாளி செல்வம் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
— மாரீஸ்வரன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.