அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பறவைகளை வாழவிடுவோம்! பறவைகள் பலவிதம்… தொடா் 5

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இதை தமிழகத்தில் எங்கும் பார்க்க முடியும் வயல்களில் புல் வெளிகளில மற்றும் சிறிய காடுகளில் காணலாம். பெரும்பாலும் இவை சாலை ஓர மின் கம்பங்களில் காணலாம். இவற்றுக்கு தமிழில் கானிப்பாடல், பனங்காடை குலம் என்று ஆரமிக்கும் சில பாடல்கள் உள்ளன.

பெரும்பாலும் பனைமரங்களில் அமர்ந்து கொண்டு பறந்து பறந்து பூச்சிகளைப் பிடிக்கும்போது அதன் சிறகுகள் வா்ணஜாலம் செய்யும் அழகே தனி, ஆனால் அமா்ந்திருக்கும்போது அதன் நிறம் பளிச்சென இருக்காது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதிகமாக பனைமரங்களை சார்ந்தே வாழ்ந்ததால் தமிழகத்தில் பனங்காடை என்பது பொருத்தமான பெயர்தான். ஆனால், இன்றைய காலங்களில் இவை பெரும்பாலும் மின்கம்பிகளிலேயே அமர்ந்திருப்பதால், மின்கம்பிக்காடை அல்லது மின்கம்பக் காடை என்று சொன்னால் கூட பொருந்தும். மனிதனால் பனைமரங்கள் அழிக்கப் பட்டதனால், அவை பாதிக்கப் பட்டுவிட்டதுதான் மிக வேதனையான ஒன்று.

பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

எனக்கு மிகமிக பிடித்தமான இந்தப் பறவையை எப்போது பார்த்தாலும் சலிப்பே வராது. அவ்வளவு சுறுசுறுப்பு. இரையை பறந்து பறந்து பிடித்து மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொள்வதைப் பார்க்க அவ்வளவு பிடிக்கும். சிறகை விரிக்கும்போதும் பறக்கும் போதும் அதன் மாயாஜால நிறங்கள் இருக்கிறதே அப்பப்பா மனதை ஈர்கும். இரைக்காக தேடித்தேடி பறப்பதெல்லாம் இவற்றின் குணம் இப்போது இல்லை. பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் இரைகள் இதைத் தேடிவரும்போது(!…) சட்டெனப் பறந்து அதைப்பிடித்துக்கொண்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொள்ளும். பூச்சிகள், சிறிய பாலூட்டிகள், சிறியபாம்பு மற்றும் தேள்களைப் பிடித்து உண்ணும். இவற்றில் ஆண் மற்றும் பெண் பறவைகளைப் பிரித்தறிவது என்பது மிகவும் சிரமம்.

கொங்குப்பகுதியில் வாழும் ஒரு இன மக்களின் உட்பிரிவின் (குலம் கோத்திரம்) ஒரு பெயர் “பனங்காடை” இது எதை உணர்த்துகிறது என்றால், மிக நீண்ட நாட்களாக மனிதர்களின் வாழ்வோடு இந்தப் பறவைகள் ஒன்றியிருக்கிறது என்பதற்குசிறந்த சான்று எனத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதில் மற்றுமொரு வகையான ஐரோப்பிய பனங்காடைகள் என்கிற ஒன்று என்று உண்டு பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே வலசை வரும் காலத்தில் காணப்படுகிறது. ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் மரங்களைக் காப்போம் அதிலும் இவற்றிற்கான பனைமரங்களை அவசியமாக காப்போம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பனை மரங்கள் என்பது பல உயிர்களின் ஆதாரம். அது உயிரோடு இருக்கும் போதும் சரி. பட்டுப் போய் தூணாக நிற்கும் போதும் சரி. பச்சை கிளிகள், பனங்காடை, மைனா என்னும் சுட்டியானை நாகணவாய் பறவைகள்,புள்ளி ஆந்தைகள், ஓணான், உடும்பு, அரணை, பாம்புகள் என கணக்கில் அடங்கா உயிர்களுக்கு ஆதரவாய் இருக்கும் பனை. மனிதனின் மூன்று தலைமுறைக்கு பலன் கொடுக்கும் மரம் இது என்றாலும் மிகையாகாது. இவைகளை மட்டுமல்ல அனைத்து பறவை களையும் காப்போம். பறவைகளை வாழவிடுவோம்! •

தொடரும்…

ஆற்றல் பிரவீன்குமார் ,

சூழல்  செயல்பாட்டாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.