விமான நிலையத்தையே வியப்படைய வைத்த மன்னர்!
நான் இதில் சொல்லப் போறவரை பற்றி கேட்டால் யாரு சாமி நீ! தெனாலிராமன் திரைபடத்தில் வரும் வடிவேலுக்கே ஃடப் கொடுப்பபோல என்று கூறுவீர்கள். ஆம் அவர் தான் தென் ஆப்பிரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி என்ற நாட்டைச் சேர்ந்த மன்னர் எம்ஸ்வாதி. இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் எஸ்வாட்டினி நாட்டை ஆட்சி செய்து வருகிறார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இவர் ஜுலை மாதம் ஒரு முறை எஸ்வாட்டினி நாட்டில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அப்போது பாரம்பரிய உடையுடன் எம்ஸ்வாதி மன்னர் அவரின் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் விமானத்தில் இருந்து இறங்கி இருக்கிறார். இதனை அங்கிருக்கும் விமான நிலைய ஊழியர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள். அதில் ஒரு ஊழியர் அதை ஒரு வீடியோ எடுத்து அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
மன்னர் எம்ஸ்வாதி பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்துடன் தான் அவர் அபுதாபி சென்றிருக்கிறார். ஆனால், தற்போது அவரது வாழ்க்கை முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதில் குறிப்பிடதக்க வகையில் இவர்களின் மூன்றாம் எம்ஸ்வாதி மன்னரின் தந்தை, 70-க்கும் மேற்பட்ட மனைவிகளையும், 210 குழந்தைகளையும், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.