தலை உருளும் … எஸ்.பி. வருண்குமாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த கொம்பன் ஜெகன் டீம் !

பெருமழை ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களால் பல்வேறு புதிய பக்கங்கள் முளைக்கத் தொடங்கின. பட்டப்பகலில் பங்க் குமாரை வெட்டி சாய்த்த அண்ணனின் ”அசால்ட்” உள்ளிட்டு, கொம்பனின் பராக்கிரமங்களை பறைசாற்றும் பக்கங்களாக இன்றும் இடம்பிடித்திருக்கின்றன.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தலை உருளும் … எஸ்.பி. வருண்குமாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த கொம்பன் ஜெகன் டீம் !

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு, கொம்பன் ஜெகன் டீம் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கடந்த நவம்பர் 22 அன்று திருச்சி சிறுகனூர் வனப்பகுதியில் போலீசுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் கொம்பன் ஜெகன்.

தமிழக கேங்ஸ்டார்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த, திருவெறும்பூர் அருகே உள்ள பணயகுறிச்சியை சேர்ந்த கொம்பன் ஜெகன் மீது அடிதடி, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலைமுயற்சி, கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்தேறியது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

எஸ்.பி.வருண்குமார்

இதனையடுத்து, ”போலீசார் முன்கூட்டியே கொம்பன் ஜெகனை சுற்றிவளைத்து கைது செய்துவிட்டு என்கவுண்டர் நாடகம் ஆடுகிறார்கள்.” என்பதாக போலி மோதல் கொலைகள் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

”திருந்தி வாழ்ந்தவனை அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டார்கள்” என்று கொம்பன் ஜெகனின் மனைவியும் உறவினர்களும் கதறினார்கள். தமிழக கள்ளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் ஆகிய அமைப்புகளோ, மனித உரிமை மீறல் என்பதாக போர்க்கொடி தூக்கினார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பெருமழை ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களால் பல்வேறு புதிய பக்கங்கள் முளைக்கத் தொடங்கின. பட்டப்பகலில் பங்க் குமாரை வெட்டி சாய்த்த அண்ணனின் ”அசால்ட்” உள்ளிட்டு, கொம்பனின் பராக்கிரமங்களை பறைசாற்றும் பக்கங்களாக இன்றும் இடம்பிடித்திருக்கின்றன.

அரசியல் வாரிசு போல, கொம்பன் ஜெகன் இடத்தை இட்டு நிரப்ப அடுத்தக்கட்ட தளபதிகள் தயாரானார்கள். அதில் ஒன்றுதான், கொம்பன் ஜெகன் டீம் (https://www.instagram.com/komban_jegan_team) என்ற இன்ஸ்டாகிராம் பக்கம்.

”திருச்சி பொன்மலை தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. திருச்சிநா அலெக்ஸ் அண்ணாவ தெரியாதவங்க இருக்க மாட்டாங்க” என்பதுபோன்ற பஞ்ச்  டயலாக்குகளுக்கு பஞ்சமில்லாமலும், பிறந்த நாள் கேக்கை பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடுவது போன்ற பராக்கிரம காட்சிகளுக்கும் பஞ்சமின்றி நிறைந்து கிடக்கிறது.

கொம்பன் ஜெகன் துதிபாடும் இதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான்,  komban Anna என்ற பெயரில் உள்ள ஸ்டோரியில் “விரைவில் தலைகல் சிதரும் – KOMBAN BROTHERS” (https://www.instagram.com/stories/highlights/18293476129162278/) என்ற வாசகங்களோடு, திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமாரின் புகைப்படத்தையும் பதிவிட்டு ”ரீல்ஸ்” வெளியாகியிருக்கிறது.

கொம்பன் ஜெகன் என்பவர் யார்? அவரது வழக்குகளின் பின்னணி என்ன? என்பதெல்லாம் போதுமான அளவு வெளியாகியிருக்கிறது. திருந்தி வாழ்கிறேன் என்பதாக போலீசிடம் எழுதிக்கொடுத்துவிட்டு, பக்கத்து மாவட்ட கல்குவாரி வரையில் பணம் கேட்டு மிரட்டியது; சீட்டாட்ட கிளப்புகளில் புகுந்து கல்லாப் பெட்டியை தூக்கியது, ரீல்ஸ் பதிவிட்டு ”சம்பவம்” செய்தது என திரைமறைவில் தனது லீலைகளை தொடர்ந்து வந்த நிலையில்தான் என்கவுண்டர் செய்யப்பட்டான் கொம்பன் ஜெகன்.

போலி என்கவுண்டரில்தான் கொம்பன் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதாக கருதுபவர்கள், நீதிமன்றத்தை நாடியோ அல்லது இதுபோன்ற போலி என்கவுண்டர்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளையோ நாடி பரிகாரம் தேடிக் கொள்வதற்கு மாறாக, எஸ்.பி.யின் ”தலை”யைத் தேடி அலைவது விசித்திரமாகத்தான் இருக்கிறது.

  • ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.