‘கொஞ்சநாள் பொறு தலைவா’ டிரெய்லர் ரிலீஸ் விழா!
ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 27-ஆம் தேதி இரவு நடந்தது.
இந்நிகழ்வினில்….
ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த்,
நடிகைகள் சாந்தி, சுதா, நடிகர்கள் ஹர்ஷத் , வைகுண்டம் , கும்கி அஸ்வின் கவிஞர் அஸ்மின், இசையமைப்பாளர் சமந்த்நாக், டான்ஸ் மாஸ்டர் சபரிஷ் ஆகியோர் சுருக்கமாக பேசி முடித்ததும்…
நாயகன் நிஷாந்த்
“இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. இந்தப்படமான கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்திற்கு மீடியா நண்பர்கள் முழு ஆதரவைத் தர வேண்டுகிறேன்”.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்
” எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளர்முருகன் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல்பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார்.ஈழத்துக் கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் படம் வெற்றி பெறும்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி
“ஆருத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறது. அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளோம். மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். நான் படம் பார்த்தேன் எனக்குப் படம் மிகவும் பிடித்தது. இப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
இயக்குநர் விக்னேஷ் பாண்டியன்
“என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷூட்டிங்கிற்கு வந்ததே இல்லை. முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. பத்திரிகை மீடியா நண்பர்கள் தான் எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தர வேண்டும். ஒரு நல்ல படம் தந்துள்ளோம் ஆதரவு தாருங்கள்”. என்றார்.
பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விக்னேஷ் பாண்டியன் .
இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். இசை: சமந்த் நாக் பாடல்கள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின், எடிட்டிங்: விது ஜீவா, பி.ஆர்.ஓ- ஷேக்.
— மதுரை மாறன்.