அங்குசம் பார்வையில் ‘கூரன்’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘கனா புரொடக்சன்ஸ்’ & வி.பி.கம்பைன்ஸ்’ விக்கி. திரைக்கதை-வசனம் : எஸ்.ஏ.சி. கதை-இயக்கம் : நிதின் வேமுபதி. நடிகர்—நடிகைகள் : எஸ்.ஏ.சந்திரசேகர், நாய் ஜான்சி, ஒய்.ஜி.மகேந்திரன், கவிதாபாரதி, பாலாஜி சக்திவேல், இந்திரஜா ரோபோ சங்கர், அருவி மதன், நிதின் வேமுபதி, சத்யன், ஷரவண சுப்பையா, ஜார்ஜ் மரியான். ஒளிப்பதிவு : மார்ட்டின் தன்ராஜ், இசை : சித்தார்த் விபின், எடிட்டிங் : மாருதி, எடிட்டிங் மேற்பார்வை : பீ.லெனின், ஆர்ட் டைரக்டர் : வனராஜ். பி.ஆர்.ஓ.: சக்தி சரவணன்.

‘கூரன்’ என்றால் மனிதர்களில் அறிவுக்கூர்மையானவன் என்று அர்த்தம். ஆனால் இந்த கூரன் அறிவுக்கூர்மையான ஒரு நாய்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

ஓய்வு பெற்ற நீதியரசர் ஒய்.ஜி.மகேந்திரனின் பார்வையில் கதை ஆரம்பமாகிறது. தான் நீதிபதியாக இருந்த போது சந்தித்த வழக்குகளில் மிகவும் வினோதமான, விந்தையான வழக்கு ஜான்சி என்ற நாய்க்கு நீதிகேட்டுப் போராடிய பிரபல வக்கீல் தர்மராஜின் [ எஸ்.ஏ.சி. ] கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

‘கூரன்’  சுப்ரீம் கோர்ட்டில் பிரபல வக்கீலாக இருந்துவிட்டு, பத்தாண்டுகளாக எந்த வழக்கிலும் ஆஜராகமால் கொடைக்கானலில் ஓய்வெடுக்கிறார் தர்மராஜன். தனது வீட்டு வேலைக்காரி ‘குண்டம்மா’ [ இந்திரஜா ] போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் தகவல் கேள்விப்பட்டு அங்கே சென்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பும் போது ஸ்டேஷன் வாசலில் சோகமுடன் படுத்திருக்கும் ஒரு நாய், அவரையே பின் தொடர்கிறது. ஒரு நாள் இரவு அவரது வீட்டின் முன்பு தொங்கும் வெங்கல மணியை அடித்து அழைக்கிறது, குரைக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

குரைப்பு அழைப்பால் அதை பின் தொடர்ந்து சென்றால், ஒரு சமாதியின் அருகே மண்ணைத் தோண்டுகிறது. அதில் ஒரு குட்டி நாய் ரத்தச் சகதியில் இறந்துகிடக்கிறது.  தனது குட்டியின் சாவுக்கு நீதி கேட்டுத்தான் தன்னைப் பின் தொடர்ந்திருக்கிறது என்ற பொறி தட்டியதும், பத்தாண்டுகளுக்குப் பிறகு ஃப்ரஷ்ஷாகி கருப்புக் கோர்ட் அணிந்து  போலீஸ் ஸ்டேஷன் போய், அந்த நாயின் மூலமே புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர்.போட வைத்து வழக்கிற்காக நீதிமன்றத்தின் படியேறுகிறார் தர்மராஜ். ஜான்சி என்ற அந்த தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கூரன்’.

‘கூரன்’ நம்ப முடியாததை, நம்ப இயலாததை நம்ப வைப்பது தான் சினிமாவின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எஸ்.ஏ.சி.யின் உதவியுடன் இதிலும் சாத்தியப்படுத்தியிருக்கார் டைரக்டர் நிதின் வேமுபதி. இந்த சாத்தியப்படுத்தலுக்கு மனுநீதிச் சோழன் கதையை கரெக்டாக மேட்ச் பண்ணியுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வக்கீல் தர்மராஜாக எஸ்.ஏ.சி. இன்ஸ்பெக்டர் அருவி மதனிடம் “ஒன்னோட ட்ராக் ரிகார்டை சொன்னா யூனிஃபார்மை கழட்டிடு நீ கம்பி எண்ண வேண்டியிருக்கும்” என சிரித்தபடியே மதனை அலறவிட்டு எஃப்.ஐ.ஆர்.போட வைப்பது, நீதிபதி ஒய்.ஜி.மகேந்திரனிடம் நாய்க்கு நீதிகேட்டு நிதானத்துடனும் ஆதாரத்துடனும்  எடுத்து வைத்து வாதிடுவது, எதிர்தரப்பு வக்கீல் பாலாஜி சக்திவேலிடம் “இந்த உலகமே சர்க்கஸ் கூடாரம் தான். மனிதர்களாகிய நாம் சோஷியல் அனிமல்ஸ், நாய் போன்ற மிருகங்கள் டொமெஸ்டிக் அனிமல்ஸ்” என ஷார்ப்பாக போட்டுத் தாக்குவது என பல இடங்களில் மனதில் நிற்கிறார் எஸ்.ஏ.சி. க்ளைமாக்ஸில் நீதியையும் நிமிர்ந்து நிற்க வைத்துவிட்டார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சேகர் ரெட்டியாக கவிதா பாரதி, ‘குரு குரு..” என எஸ்.ஏ.சி.யை கூப்பிடும் துறுதுறு குண்டம்மாவாக இந்திரஜா, “இந்த லூசுப்பயலுக குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேனே” என புலம்பும் வக்கீலாக பாலாஜி சக்திவேல், என அனைவருமே நல்ல நடிகர்கள் தான். ஆனால் படத்தில் கவிதா பாரதியின் அரைலூசு மகனாக நடித்திருக்கும் டைரக்டர்  நிதின் தான் கோர்ட் கூண்டில் நீதிபதி முன்பு அரைலூசாக நடித்து எரிச்சலைக் கிளம்பிவிட்டார். நாயையே நடிக்க வைக்கத் தெரிந்த உங்களுக்கு நடிப்பே வரலயே தம்பி.

போலீஸ் நாயாக இருந்த பைரவா தான் இப்போது ஜான்சி என்ற ஃப்ளாஷ்பேக், நாய் பேசும் என்ற ’அன்பிலிவபிள்’மிராக்கிள், நாய் பாஷைய டிரான்ஸ்லேட் பண்ணும் சத்யனின் கேரக்டர், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஜார்ஜ் மரியானின் ’ஐவிட்னெஸ்’  ஐடியா இவற்றிற்காக டைரக்டருக்கு சபாஷ் போடலாம்.

‘கூரன்’ கவனிக்க வைக்கிறான்.

 

—  மதுரைமாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.