ஓர் நடைபயணத்தில் கண்டேன்!

சிறுவர் சிறுமியர்

சேர்ந்து கூட்டாஞ்சோறு

ஆக்கினார்கள்!

குட்டி குட்டி பாத்திரங்கள்

களிமண், அலுமினியம்

எவர்சில்வராலான சாமான்கள்!

காணவே அழகு!

தும்பை பூ தான் சாதம்

மஞ்சள் தூள் கலந்து நீர் குழம்பு

ஆளுக்கு ஒரு ஸ்பூன் பரிமாற்றம்!

வயிறு நிரம்பிய திருப்தி!

அப்படியே வழியில்

சுற்றுச்சுவரற்ற

ஓர் ஆலயம் கண்டேன்!

கற்களால் செய்த சிலையின்

தலையில் பாலை ஊற்றுகிறார்கள்!

மஞ்சள் பூசி விதவிதமான பூக்களை

வைக்கிறார்கள்!

விதவிதமான உணவு

சமைத்து பரிமாறுகிறார்கள்!

அதை

பிரசாதம் என்கிறார்கள்!

எனக்கென்னவோ

கூட்டாஞ்சோறாக்கிய குழந்தைகளுக்கும்

இவர்களுக்கும்

வித்தியாசம் ஒன்றும்

தெரியவில்லை!

 

 —    அ. யோகானந்தி

Comments are closed, but trackbacks and pingbacks are open.