டீக்கடைத் தொழிலாளியின் மகன் ஹீரோவான சம்பவம்! இது ‘குமார சம்பவம்’ நிஜ சம்பவம்!
‘யாத்திசை’ என்ற மிகச் சிறந்த படத்தைத் தயாரித்த ‘வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜி.கணேஷ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘குமார சம்பவம்’ படம். டோட்டல் காமெடி & ஃபேமிலி டிராம ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ‘லக்கிமேன்’ படத்தை டைரக்ட் பண்ணிய பாலாஜி வேணுகோபால் டைரக்ட் பண்ணியுள்ளார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ டி.வி.சீரியல் மூலம் ஃபேமஸான குமரன் தங்கராஜன், இப்படம் மூலம் சினிமா ஹீரோவாக எண்ட்ரியாகியுள்ளார். ஹீரோயினாக பாயல் அறிமுகமாகிறார். மற்ற கேரக்டர்களில் தாரிணி, குமரவேல், லிவிங்ஸ்டன், பால சரவணன், கவிதா, சிவா அரவிந்த், ஜி.எம்.குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை ; அச்சு ராஜாமணி, பாடல்கள் : பாலாஜி வேணுகோபால், எடிட்டிங் : மதன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
12-ஆம் தேதி ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர்.02-ஆம் தேதி மாலை நடந்தது. விழாவில் பேசியவர்கள்..
எடிட்டர் மதன் ,
”இந்தக் கதையை பாலாஜி சொன்னதும் இதை எப்படி எடுக்கப் போற எனக் கேட்டேன். அதுக்குத் தான் உன்கிட்ட வந்திருக்கேன் என்றார்.அந்தளவுக்கு என்மீது நம்பிக்கை வைத்தார். அவர் சொன்னது போலவே கதையை நேரடியாக சொல்லாமல் நான் –லீனியர் பாணியில் சொல்லியுள்ளார். வானொலியில் வேலை பார்த்ததால் ஒலி வடிவமைப்பிலும் பாலாஜி வேணுகோபால் கில்லாடி. இந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவிலும் நல்ல ஸ்டாராக மிளிர்வார் ஹீரோ குமரன்”
சரிகம ஆனந்த்,
“யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளருடன் மீண்டு கைகோர்ப்பதில் மகிழ்ச்சி. எனது நீண்ட கால நண்பர் பாலாஜி வேணுகோபாலின் இப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி எண்டெர்டெய்ணர். உங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்”’
குமரவேல்,
“வாடகைக்கு குடியிருக்கும் ஒருவனுக்கும் அந்த வீட்டின் ஓனருக்குமிடையிலான பிரச்சனை தான் இப்படம். எனக்கான சீன்கள் ஒரே வீட்டிற்குள் நடந்தாலும் அதை காட்சி மொழியாக துல்லியமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர்”.
அச்சு ராஜாமணி,
“நானும் பாலாஜியும் பதினைந்து ஆண்டுகால நண்பர்கள். எனது நண்பன் இந்தப் படத்தின் ஆறு பாடல்களையும் எழுதியுள்ளார். பாலாஜிக்கு குரு பக்தி அதிகம்”.
ஹீரோயின் பாயல்,
“எனக்கு தமிழில் முதல் படம். வழக்கமான காதல் கதையில் வரும் ஹீரோயின்கள் போல இல்லாமல் நல்ல கேரக்டர் தந்திருக்கார் டைரக்டர். தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கும் ஹீரோ குமரனுக்கும் நன்றி”.
ஹீரோ குமரன் தங்கராஜன்,
“சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பது பதினேழு ஆண்டுகால கனவு, லட்சியம். எனது அப்பா டீக்கடைத் தொழிலாளி. அவரது ஆசையும் கனவும் நான் சினிமா ஹீரோவாக வேண்டும் என்பது தான். பல ஆண்டுகளாக போராடி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ டி.வி.சீரியல் மூலம் முகம் தெரிய ஆரம்பித்தேன். இப்போது சினிமா ஹீரோவாக எனது பயணத்தை ஆரம்பித்துள்ளேன். எனது பயணத்திற்கு துணை நின்ற தயாரிப்பாளர் கணேஷ் சார், இயக்குனர் பாலாஜி வேணுகோபால், என்னுடன் நடித்த கலைஞர்கள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த ‘குமார சம்பவம்’ என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கிய சம்பவம். மீடியா நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன்”.
டைரக்டர் பாலாஜி வேணுகோபால்,
“குமரன் தியாகராஜன் மூலம் தான் தயாரிப்பாளர் கணேஷ் சாரின் நட்பு கிடைத்து இப்படம் சாத்தியமாகியுள்ளது. எனது ‘லக்கிமேன்’ ரிலீசாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. நான் சோர்வாகும் போதெல்லாம் அந்தப் படத்திற்கு மீடியாக்கள் கொடுத்த ஆதரவும் விமர்சனமும் தான் என்னை ஊக்கப்படுத்தியிருக்கு. இந்தப்படம் உங்கள் நேரத்தை வீணடிக்காது என்பதற்கு நான் உத்தரவாதம்”.
— ஜெடிஆர்