அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

பென் ஸ்டுடியோஸ்’ ஜெயந்திலால் காடா வழங்க,  தவல் காடா தயாரிப்பில் பிரபுசாலமன் டைரக்ஷனில்உருவாகி, வரும் 14- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘கும்கி-2’. இதையொட்டி படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை வடபழனி பளாஸோ  தியேட்டரில் நேற்று ( நவம்பர் 06)நடந்தது. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஹீரோயின்ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெராடி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதில் இருந்து…..

ஹீரோயின் ஸ்ரீதா ராவ்

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைக ளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கி றோம்.

நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றிகள் “.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஹீரோயின் ஸ்ரீதா ராவ்இயக்குனர் நிதிலன்

“பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் சார் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.

கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப் படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன்.

பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள்”

இயக்குனர் மடோன் அஸ்வின்

“கும்கி-1 மக்கள் கொண்டாடியதைப் போல இதையும் கொண்டாடுவார்கள்.

படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள்”

இயக்குனர் பிருந்தா சாரதி

“ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற் கொண்டு வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார்.

மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்”.

இயக்குனர் சரண்

“நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனி போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கு.

பிரபு சாலமன் படங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அவரால் கண்டெடுக்கப்பட்டவர்கள்அனைவரும் சினிமாவில் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லிங்குசாமி ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக நுணுக்கமாக செதுக்குகிறார் என்று அருகில் இருந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் இப்படத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

பலருடைய வெற்றிக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் திருப்பு முறையாகவும் திருப்பதி பிரதர்ஸ் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும்.

யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும்”.

கும்கி--2புதுமுக ஹீரோ மதி

“இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி.

பிரபு சாலமன் சார் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி சார் தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி சார் மற்றும் போஸ் சார் தான்.

பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்  எனது மனைவி சரண்யாவிற்கு மிக்க நன்றி”.

நிவாஸ் கே பிரசன்னா

“இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-1-ல் இமான் சார் கூட்டணி மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன்”.

தயாரிப்பாளர் ஜெயந்திலால் காடா

“கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸுக்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.

கும்கி-2 எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹிருத்திக் ரோஷன்”.

கும்கி--2இயக்குனர் பிரபு சாலமன்

“இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது.

இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரூஸ், ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்த திருக்கிறார்கள்‌ இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்பதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்பு கள் அனைத்து குலுங்கி போனது.

அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம்.

இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டுக் காட்டினோம். ஆனால் 2020-ல் கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.

முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.

தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.

என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்ததற்கு நன்றி.

டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏன்னி இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னா ஆன்மாவை கொடுத்திருக்கிறார்”.

இயக்குனர் லிங்குசாமி

“காடா சார் எங்களுக்கு ‘காட்'( கடவுள்)மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப் போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்.

காடா சார் இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார்.

ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா.

கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி சார் மற்றும் கமல் சார் வந்து வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை ஹிந்தியில் வெளியிட கூடியவர் ஜெயந்திலால் காடா சார். அவர் மதியை அறிமுகப்படுத்தியிக்கிறார். ஹிருத்திக் ரோஷன் என்று மதியை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.

இப்படம் மிகவும் காலதாமதமாகியிருக்கலாம். ஆனால், காடா சார் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமனை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார்.

கும்கி-2 நிச்சயம் மாபெரும் வெற்றியடையும்”..

தொழில் நுட்பக் குழு:

இசை : நிவாஸ் கே. பிரசன்னா

ஒளிப்பதிவு: எம். சுகுமார்,

எடிட்டிங்: புவன்,

கலை இயக்கம் : விஜய் தென்னரசு, ஸ்டண்ட்:  சிவா, காஸ்ட்யூம் : வி.பி. செந்தில் அழகன்,

தயாரிப்பு நிர்வாகம்: ஜே. பிரபாகர்,

மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

  —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.