‘குற்றம் கடிதல்-2’ ஆரம்பம்!
2023-ல் ரிலீசாகி தேசிய விருது ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஜூலை.28-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் ஜே.எஸ்.சதீஷ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பாண்டியராஜன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, பிஎல் தேனப்பன், பாலாஜி முருகதாஸ், அப்புக்குட்டி, விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களின் டைரக்டரும் ‘அநீதி’, ‘தலைமைச் செயலகம்’ [ வெப் சீரிஸ் ] படங்களின் வசனகர்த்தாவுமான எஸ்.கே.ஜீவா தான் ‘குற்றம் கடிதல்-2]-ன் இயக்குனர். ஒளிப்பதிவு : ஜி.சதீஷ், இசை : டி.கே., எடிட்டிங் : சி.எஸ்,பிரேம்குமார், ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ, நடனம் : மானஸ், தயாரிப்பு நிர்வாகி; ப.ஆறுமுகம், பி.ஆர்.ஓ. : ரேகா [ ரான் டி ஆர்ட் ]
ஓய்வு பெறும் வயதை நெருங்கும் போது நல்லாசிரியர் விருது பெறும் பள்ளி ஆசிரியருக்கு நடக்கும் எதிர்பாராத பல சம்பவங்கள் தான் படத்தின் கதை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதன் ஷூட்டிங் நடக்கவுள்ளது.
— மதுரை மாறன்