‘எல்.ஐ.கே.’ டீசர் ரிலீஸ்
ரெளடி பிக்சர்ஸ் பேனரில் நயன்தாரா தயாரிப்பில் , அவரது கணவர் விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே.’ படம் தீபாவாளிக்கு [ அக்.17] ரிலீஸ் ஆவதை மீண்டும் கன்ஃபார்ம் பண்ணியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதனால் படத்தின் டீசரை பிள்ளையார் சதுர்த்தியன்று ரிலீஸ் பண்ணியுள்ளது. படத்தை வழங்குபவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார்.
ஹீரோவாகிவிட்ட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, கெளரி கிஷன், சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ரவிவர்மன், இசை : அனிருத், எடிட்டிங் : பிரதீப் ராகவ், தயாரிப்பு வடிவமைப்பு : டி.முத்துராஜ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
— மதுரை மாறன்