கோடாங்கிபட்டி – போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலின மக்களின் நிலங்கள் அபகரிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1994 ஆம் ஆண்டு 97 நபர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை போலி பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கள், வாரிசு சான்றிதழ் தயாரித்து தனிநபர்கள் மோசடி செய்து வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்து வரும் அவலம்.

தேனி மாவட்டம் போடி தாலுகா கோடாங்கிபட்டி கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு 97 நபர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை போலி பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கள், வாரிசு சான்றிதழ் தயாரித்து தனிநபர்கள் மோசடி செய்து வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதி திராவிட மக்களுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு ஆயிஷா மரியம் என்பவரிடம் நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிட நலத்துறை தலா 2 சென்ட் வீதம் சுமார்   1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை 97 நபர்களுக்கு வீட்டடி மனைகளாக வழங்கப்பட்டது.

அந்த நிலத்தில் ஆதிதிராவிட மக்கள் குடியேற விடாமல் ஆளுங்கட்சி பிரமுகர் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தடுத்து வந்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்

இது குறித்து ஆதிதிராவிட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த பொழுது காவல்துறையின் உதவியோடும் வருவாய் துறையின் உதவியோடும் போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த நபர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைனர் செயல்பட்டனர்.

இந்த மோசடி சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 1994 ஆம் ஆண்டு முதலில் வழக்கு நடைபெற்று வருகிறது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதனை சாதகமாக பயன்படுத்திய மோசடி நபர்கள் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தற்பொழுது வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்து தற்போது வீடு கட்டி வருகின்றனர்.

இது குறித்து தற்பொழுது பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடந்து உள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் இந்த ஆதிதிராவிடர் மக்களை பழநி செட்டி பட்டி காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு அவர்களை அலங்கரிப்பு செய்து வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்கள் சுமார் 97 நபர்களும் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடமும் புகார் தெரிவித்தனர்.

எனவே மோசடியாக பத்திரம், பட்டா, சிட்டா, வாரிசு சான்றிதழ், உள்ளிட்டவைகளை தயாரித்து மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆதி திராவிட மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்ய வேண்டும். போலி ஆவணங்கள் தயாரிக்க ஆதரவாக செயல்பட்ட வருவாய் துறை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 97 ஆதிதிராவிடர் மக்கள் தற்பொழுது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.