தொடரும் மாணவா்கள் தற்கொலை ! தீர்வு காணுமா தமிழகா அரசு !
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள தங்கபழம் தனியார் சட்டக் கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும் எனவும் சட்டக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு காவல்துறை தங்கபழம் தனியார் சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த கோரியும்,
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் மாணவர்களின் தற்கொலைக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், மற்றும் திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் கிளை தலைவர் பூங்குடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் சூர்யா கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்த்தி மாவட்ட துணை தலைவர் அன்பு மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.