அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலெக்டர வர சொல்லுங்க … வட்டாட்சியரை முற்றுகையிட்ட வக்கீல்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

”வாடகை கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் செயல்பட்டு வரும் நீதிமன்ற வளாகத்தை மாற்றம் செய்யக்கோரி, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவருகிறோம். இதற்கு ஓர் முடிவு  தெரியாமல் இந்த இடத்தை விட்டு அகலப்போவதில்லை. கலெக்டரை இப்போ இங்கே வரச்சொல்லுங்கள்” என்று திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

”லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?” என்ற தலைப்பில் அங்குசம் இணையத்திலும், 2026 – பிப்ரவரி 11 தேதியிட்ட அங்குசம் வார இதழிலிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Admission Enquiry Form

லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?

திருச்சி மாவட்டம் இலால்குடியில் ஒருங்கிணைந்த தாலுகா நீதிமன்றங்கள் நூறாண்டு பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்தது. நீதிமன்றத்திற்காக புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றும் அதுவரையில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்திற்கு மாற்றம் செய்வதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்கி வந்தது.

குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களும் ஒரே கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். தினம்தோறும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் ஆயிரக்கணக்கான வழக்காடிகளும் ஒன்றுகூடும் நிலையில், அவர்கள் ஒன்னுக்குப்போவதற்குக்கூட வழியில்லை என்கிறார்கள். மூன்று மாடிகளை கொண்ட அந்த கட்டிடம் மிகவும் குறுகலான இடத்தில் அமைந்திருக்கிறது. வாகனங்களை நிறுத்துவது பெரும்பாடு. அவ்வளவு ஏன் நடந்து செல்வதற்கே ஒற்றையடி பாதைதான். கட்டிடத்தில் லிப்ட் இருக்கு ஆனா இல்லை என்கிற கதைதான். எப்போது இயங்கும் எப்போது கோளாறு ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எதிர்பாராமல் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், பதட்டத்தில் நாலாபுறமும் ஓடுவதற்குக்கூட வழியில்லை. குறுகலான வழியில் நெரிசலில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தையும் எதிர்கொண்டிருக்கிறது அந்த கட்டிடம் என்கிறார்கள்.

முற்றுகை போராட்டம்
முற்றுகை போராட்டம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில்தான், எப்படியும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கான மாற்று இடத்தை ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டித்தந்துவிடும் என்று எட்டு ஆண்டுகளாக காத்திருந்தார்கள் வழக்கறிஞர்கள். இடையில் அவ்வப்போது, பல்வேறு முறையீடுகள், அதிகாரிகள், அமைச்சர்கள் சந்திப்புகள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி ஓய்ந்தும் விட்டார்கள். ஆனாலும், ஆமை வேகத்தில்கூட பணிகள் நடைபெறவில்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே, அவர்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இதற்குமுன்னர் பழமையான பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தபோது, அதே நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே இலால்குடி வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிளைச்சிறையும் இயங்கி வந்தது. தற்போது, வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டிருக்கிறது. சார்பதிவாளர் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது. ஒரே வளாகத்தில் இத்தனை அலுவலகங்களும் இயங்கிவரும் நிலையில், அதிலும் குறிப்பாக கிளை சிறை இயங்கும் நிலையில் இதே இடத்தில் மீண்டும் நீதிமன்ற வளாகத்தை கட்டினால் எதிர்காலத்தில் இட நெருக்கடி உள்ளிட்டு பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படும் என்பதாக வருவாய்த்துறை தரப்பில் ஆட்சேபணை தெரிவித்ததன் அடிப்படையில்தான், நீதிமன்ற வளாகத்திற்கு என தனி இடம் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள்.

பழைய நீதிமன்ற கட்டிடம்
பழைய நீதிமன்ற கட்டிடம்

ஆனால், இதுவரையில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்யாமல் வருவாய்த்துறையினர் வேண்டுமென்றே அலைக்கழிப்பதாக குற்றஞ்சுமத்துகிறார்கள், வழக்கறிஞர்கள். நெருக்கி கேட்டால், இடத்தை நீங்களே சொல்லுங்கள் என்கிறார்கள். வருவாய்த்துறையினராலேயே கண்டறிய முடியாத இடத்தை நாங்களா கண்டறிய முடியும் என எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் வழக்கறிஞர்கள்.

வட்டாட்சியர், ஆர்.டி.ஓ., கலெக்டர் என சுற்ற விடுகிறார்கள். எங்களுக்கான இடத்தை முடிவு செய்வதில் என்னதான் சிக்கல் என்பதை மாவட்ட நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும். இன்னும் இடமே முடிவாகாத நிலையில், எப்போது அடிக்கல் நாட்டி எப்போது கட்டிடத்தை கட்டி முடிக்கப்போகிறீர்கள்? ஏற்கெனவே, எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. இனியும் பொறுத்துப்போவதாக இல்லை. இதில் ஒரு இறுதி முடிவு எட்டாமல் இந்த இடத்தை விட்டு அகலப்போவதும் இல்லை என்ற முடிவோடு இலால்குடி வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து இலால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.

பார்ப்போம், என்னதான் நடக்கிறதென்று?

எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்
எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்

இந்த விவகாரம் குறித்து லால்குடி தொகுதியின் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “எல்லா முன்னெடுப்புகளிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் கடந்துதான் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எனது தரப்பிலும் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகிறேன். பிராசஸ்லதான் இருக்கு. சீக்கிரம் முடிஞ்சிரும்.” என்றார்.

—         சதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.