போலி சான்றிதழ்கள் தயாரித்த விவகாரம்: திருச்சி சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது !
போலி சான்றிதழ்கள் தயாரித்த விவகாரம்: திருச்சி சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது ! சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவ சங்க மாநில தலைவரை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் சிதறி கிடந்தது.
இதை அந்த வழியாக நடைப்பயிச்சிக்கு சென்ற அதிகாரிகள்அந்த சான்றிதழ்களை பார்த்து ஆய்வு செய்தனர். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அண்ணாலை பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு ) பிரபாகரன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிதம்ரம் மன்மதசாமி நகர் பகுதியை சேர்ந்த சங்கர் , சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன், அருள் பிரகாசம் ஆகிய 3 பேரும் சேர்ந்து போலிசான்றிதழ்கள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் ஏராளமான போலி சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத போலி சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப்கள், பிரிண்டர், போலி முத்திரை, போலி அட்டை, செல்போன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவர்களை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆவணங்களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தீவிர புலன் விசாரணை செய்தனர்.
சி.பி.சி.ஐ.சி விசாரணையில் அகில இந்திய சித்தமருத்துவ சங்க தலைவராக உள்ள திருச்சியை சேர்ந்த சுப்பையா என்பவர் போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜெண்ட் போல் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டிற்குள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் சுப்பையா பண்டியன் மற்றும் அவர் மனைவி தமிழரசி பெயரிலும் போலி சான்றிதழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய வீட்டில் இருந்து 10க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்தனர். சுப்பையா பண்டியனை கைது செய்து கடலூருக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை செய்து வருகிறனர்.
யார் இந்த சுப்பையா பாண்டியன் –
ஆரம்ப கட்டத்தில் ஜாதி அரசியலில் இருந்தவர் மெல்ல மெல்ல அந்த செல்வாக்கை பயன்படுத்தி அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவராக இருந்தவர். டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன். இவரும் இவரது மனைவி டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன். அவர் அதிமுக மா.செ. பரஞ்சோதி மூலம் மன்னார்குடி குரூப் மகாதேவனுக்கு நெருக்கமாகி அதிமுகவில் முக்கிய பொறுப்பில் தன்னை தக்க வைத்துக்கொண்டார்கள். ஒரு முறை அதிமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு சீட்டு அறிவிக்கப்பட்டு சில பிரச்சனைகளில் வேறு ஒருவருக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இவர் திருச்சி தில்லைநகரில் கார்த்திக் சித்த வைத்தியசாலா என்ற கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் மனைவியும் சித்தமருத்துவர், இவருடைய மகனும் கார்த்திக்கும் சித்தமருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.
போலி மருத்துவர்களின் தலைவன் சுப்பையா பாண்டியன் | பகீர் கிளப்பும் Audio | Part 1
இவர் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இதனால் ஆண்டு தோறும் சித்தமருத்துவர்கள் மாநாடு நடத்துவார். தமிழக முழுவதும் சித்தமருத்துவர்களுக்கு டாக்டர் சான்றிதழ் இவரே வழங்குவதும் இது தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகள் இருந்து வந்தநிலையில் திடீர் என திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அமைச்சர் கே.என்.நேருவை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
இவரும் இவரது மனைவியும் அவர்கள் அவர்களது பெயரில் போலி சான்றிதழ் வைத்துள்ளார்கள் இன்று எழுதியுள்ளீர்கள் ஆனால் ஒரு கோடி சித்த மருத்துவர் எப்படி மாநில அளவில் தலைவராக இருக்க முடியும் தயவு செய்து போலிகளை தோலுரித்துக் காட்டுங்கள். ஆனால் சித்த மருத்துவர் களை இழிவுபடுத்தாதீர்கள்
ஒரு “கோடி”யை ஒரு “போலி” என வாசிக்கவும்
ஒரு “கோடி”யை ஒரு “போலி” என வாசிக்கவும்