இரண்டு இலட்சத்துக்கு ஏலம் போன ஒன்பது எலுமிச்சம் பழங்கள் ! அம்மாடியோ… அப்படி என்ன இருக்கு அதுல ?

உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் ...

0

இரண்டு இலட்சத்துக்கு ஏலம் போன ஒன்பது எலுமிச்சம் பழங்கள் ! அப்படி என்ன பவர்  இருக்கு அதுல ?

லுமிச்சம் பழத்தின் சிறப்பு பித்தம் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளும். அப்படி தலைக்கு ஏறிவிட்டால் தலையில் வைத்து தேய்த்தால் பித்தம் தெளிந்து விடுமாம். அந்த காலத்தில ராஜாவை பார்க்க போனால் ஏதாவது பொருள், பழம் எடுத்து செல்வது வழக்கம். ஆனால், வசதி இல்லாதவன் ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்து செல்வானாம். ஒண்ணு ராஜாவுக்கு வைத்தியம் செய்ய அல்லது ராஜாவுக்கு பைத்தியம் தெளிய வைக்க. அவ்வளவு சிறப்பு. இப்பழத்திற்கு.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இப்படி சிறப்பு வாய்ந்த பழத்தை தான் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயிலில் மூலவராக வேல் மட்டுமே உள்ளது. இந்த கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவங்களில் கோவில் சார்பில் தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்களை, இடும்பன் சிலை அருகே பூஜையில் வைத்து ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த எலுமிச்சை பழத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். தலைமை பூசாரி ஆணி பதித்த காலனியில் நின்று ஏலத்தை தொடங்கினார்.   ஒரு எலுமிச்சை பழம் ரூ.50,500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 9 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், மொத்தம் 9 எலுமிச்சை பழங்கள் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

குழந்தை பாக்கியம் வேண்டி அந்த எலுமிச்சை பழத்தை தி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் – கனிமொழி தம்பதியினர் ஏலம் எடுத்தனர். எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வினோத திருவிழாவில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று முழுங்கி முருகனை வழிபட்டுச் சென்றனர்.

மருத்துவர் ராஜகுமாரி.

”எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டுள்ள எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த. சிட்ரஸ் பழமான இது அமிலத்தன்மை வாய்ந்தது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது. உடலை சுத்தம் செய்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு உடல் சுத்தமாக இருந்தாலே குழந்தை தங்கும்  இது தெய்வத்தால் தான் நடக்கிறது என்பது அவரவர் நம்பிக்கை இதை சாப்பிட்டால் திருமணம் கைகூடும் என்பது மூடநம்பிக்கையின் உச்சம்” என்கிறார், அரசு பொது மருத்துவர் ராஜகுமாரி.

கே.எம்.ஜி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.