அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16 வது மாநில மாநாடு பிப்ரவரி 5,6,7 மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு  மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.இப்ராகிம்  வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு.

மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் கால நேர நகர்வுகளுக்கு மத்தியில் மக்களும் தங்களுடைய வேகங்களை காட்டத் தொடங்கி விட்டனர். வேகம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களின் பார்வை ஒரே நேர்கோட்டை நோக்கி முன்னேறியதாக இருக்கிறது. இப்படி குடும்பம், பொருளாதாரம், வருங்காலம் பற்றிய சிந்தனை என்று மக்கள் வெகுஜன வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை தாங்களே மாற்றிக் கொண்டு விட்டனர். இதன் காரணமே அண்டை வீட்டுக்காரரின் பெயர் கூட அறியாத வாழ்க்கை முறையாக மாறிவிட்டது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஒரு சாமானியரின் சிந்தனையே இவ்வாறு இருக்க தனது மகன், மகள் அரசியல் பேசுவதை எந்த ஒரு பெற்றோரும் விரும்புவதில்லை. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் அரசியல் பயின்று விடக்கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக மாணவன் அரசியல் பயின்றால் கேள்வி கேட்பான் இதனால் சட்டத்தை மீறி லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் என்பதால் வளாகங்களுக்குள் தடுக்கப்பட வேண்டிய தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை தாராளமாக உலவ விட்டுவிட்டு, வாழ்வின் அடிப்படையான அரசியலை பேச கடும் நெருக்கடியை கொடுக்கின்றனர்.

அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!
அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதே நேரம் சாதாரண மக்கள் வெகுஜன வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு தன் குடும்பம், தன்னலன் என்று இயங்கிக் கொண்டுருக்கக் கூடிய வேலையில் அடுத்த மனிதனின் மீது அக்கறை என்பது பிரச்சனைகள் சார்ந்த வருத்தமாக மாறிவிட்டது. மேலும் அரசியலும் தீண்டத்தகாத தீட்டாக கருதப்படுகிறது. இந்த நிலையில் லெனின் சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. அரசியலில் நாம் தலையிடாவிட்டாலும் அரசியல் நமது வாழ்க்கையில் தலையிடும். அரசியலை நாம் நிராகரித்ததன் காரணமாக நம்மால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அரசியலின் அதிகார மையங்களாக ஓங்கி உயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

இதன் வெளிப்பாடுதான் மக்கள் நலனுக்கு எதிரானவற்றை அதிகாரத்தை தனது கைக்குள் வைத்திருக்கக்கூடிய நபர்கள் எளிதாக செய்கின்றனர். இது மட்டுமல்லாது கல்வி, மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், அடிப்படை உரிமைகள், அன்றாட தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் என்று அனைத்தையும் மக்களிடமிருந்து பிளவுபடுத்த தொடங்கி விட்டனர்.

மேலும் மாற்றத்திற்கான முதல் முயற்சி கல்வி என்பதாலேயே ஆண்டாண்டு காலமாக கல்வியில் இருந்தே அடக்கு முறையை தொடங்குகின்றது. அதோடு கல்வியில் தனியார் மையம் புகுத்தப்பட்ட பிறகு கல்வி கட்டமைப்பு என்பது சிறுக சிறுக மாற்றி அமைக்கப்பட்டு தற்போது முற்றிலும் சுயநலம் சார்ந்த ஒன்றாக சித்தரிக்கப்பட்டு விட்டது. மாணவர்கள் ஒன்று கூடாமல் பார்த்துக் கொள்வதில் பெரும் முதலாளிகளும் அதிகார மையங்களும் ஒன்றிணைந்து பயணிக்கின்றனர்.

வருங்கால தலைமுறைக்கு அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லி பழக்கபடுத்திவிட்டு, ஊடகங்கள் வழியாக விளம்பரங்களையும், ஆடம்பரங்களையும், கவர்ச்சிகளையும், பொய் புழுகளையுமே அதிகம் காட்சிப்படுத்துகின்றனர். நிராகரிக்கப்பட வேண்டியவர்களை அதிகம் பார்த்தும் படித்தும் வந்த மக்கள் அரசியலையே அபத்தம் என்று எண்ண தொடங்கி விட்டனர். இதன் காரணமே அறம் சார்ந்த அரசியல் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விட்டது.மேலும் மாணவர்கள் அரசியல் பேசி விட்டால் வேலைக்கு செல்வது கடினமாக மாறிவிடும், அதிகார வர்க்கத்துடன் நேரடி பகை ஏற்படும், பிரச்சனையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ற பிம்பம் சித்தரிக்கப்பட்டு மாணவர்களும் அரசியலும் வேறு வேறு என்று எண்ணத்தை புகுத்தி விட்டனர்.

கல்வியையும் அதன் வரையறையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் மகிழ்ச்சியை தருவதாக, கற்றுக் கொடுப்பதாக, சிந்திக்கத் தூண்டுவதாக, கற்பனைகயை நினைவாக்குவதாக, இன்பம் பொருந்தியதாக, வாசிப்பை பழகுவதாக, சமத்துவம் போதிப்பதாக, ஏற்றத்தாழ்வை நீக்குவதாக, அனுபவத்தை போதிப்பதாக, நிறை குறைகளை ஆராய்வதாக, மனிதநேயத்தை கற்பதாக, ஒற்றுமையை உணர்த்துவதாக, விவாதங்களை எழுப்புவதாக, பாலினம் சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதாக, சுதந்திரமானதாக, தேவைக்கேற்ப, அறிவுச் சார்ந்ததாக, பாதுகாப்பு அளிப்பதாக, அரசியல் தெளிவாக, சட்டம் அறிய, கேள்வி எழுப்புவதாக, சூழலியல் தெளிவாக, எளிமையானதாக, விஞ்ஞானபூர்வமானதாக, இப்படி ஒழுக்கம் சார்ந்த கற்பித்தலை கொண்டிருக்க வேண்டிய கல்வி பகுத்தறிவுக்கு எதிரான அடிப்படைவாத கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாக மாறிவிட்டது. அதோடு லாபப் பொருளாக மட்டுமே கருதப்படுவதால் மதிப்பெண்ணுக்காக மனம் செய்ய மட்டுமே மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர் இதனால் தேர்வு சுமையாக மாறிப்போனது. இதன் உடனடி வெளிப்பாடாக இடைநிற்றல், தாழ்வுமனப்பான்மை, ஏற்றத்தாழ்வு, குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு அதிகரித்துவிட்டது.

ஆபத்தில் உள்ள கல்விக்கு பேராபத்து என்ற வகையில் ஒன்றிய மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை உள்ளது. கல்வி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிதியை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வழி செய்திருக்கிறது. தந்தையின் தொழிலை சார்ந்து மகன் படிக்க வேண்டும் என்ற குலக்கல்வியை ஊக்குவிக்கிறது, புரிதலையும் வாசிப்பையும் அறிவியலையும் தவிக்கிறது, தாய்மொழி கற்பித்தலை குறைக்கிறது, தகுதியை வளர்க்க கல்வி கற்ற நிலையில் கல்வி கற்கவே தகுதி வேண்டும் என்ற தேர்வு முறை கொண்டுவரப்படும் மேலும் கல்வி முழுக்க முழுக்க தனியார் பெரும் முதலாளிகளின் லாபமிட்டும் சந்தையாக மாற்றப்படும். அடிமைப்பட்ட காலத்தில் எப்படி கல்வி உரிமை என்பது ஒரு சாரார் என்ற நிலையில் இருந்ததோ அதை நிலை மீண்டும் வரும்.

அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!
அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!

அரசியல் பழகுவோம்!

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வாழ்வியலின் அங்கமாய் மாறிப்போன அரசியலை தவிர்த்து விட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது நோய் இருக்கிறது என்று தெரிந்தும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் உயிரை விடுவதற்கு சமமாகும். அரசியல் என்பது உணவு, உடை, இருப்பிடம் என்று அடிப்படை முதல் வாழ்வின் அனைத்து அங்கங்களையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிப்போன வாழ்வியல் முறையில் அரசியலை தவிர்த்து வாழ்வை நடத்துவது சாத்தியமற்றது. புரட்சியாளர் லெனின் கூறுவது போல அரசியலில் நாம் தலையிடாவிட்டாலும் அரசியல் நமது வாழ்க்கையில் தலையிடும். நாம் அரசியலை நிராகரித்ததால் நம்மால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அதிகார மையமாக மாறிவிடுகின்றனர். தேவையும், அடுத்த மனிதன் பற்றிய அக்கறையும், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் தான் அரசியல் என்று சொல்லித் தரவேண்டிய கல்வி நிலையங்கள் மாணவர் பேரவை தேர்தலை நடத்தக்கூட முன் வருவது கிடையாது. மேலும் சாதி, மதம், இனம், மொழி, நிறம், நிலம் என்ற எவ்வித ஏற்றத்தாழ்விற்குள்ளும் அகப்படாமல் அனைவரும் சமம் என்று புரிதலை உருவாக்குவதே கல்வி. இதுவே அரசியல்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவோம்!

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தில் இந்திய பெரும் நிலப்பரப்பு அடிமைப்பட்டு கிடந்த நேரத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் தலைமையில் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு ராணுவம் கட்டமைக்கப்பட்டு இளம் வயதினர் கொண்ட சுதந்திரத்திற்கு போராடும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இருந்த மாணவர்களையும் ஓர் அமைப்பாய் திரட்டி இந்தியா முழுவதும் பூரண விடுதலைக்காக போராட வேண்டும் என்ற நோக்குடன் 1936 ஆகஸ்ட் திங்கள் 12ஆம் நாள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மாணவர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்ததோடு, சுதந்திரத்திற்கு பிறகும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணமில்லா கல்வி, அனைவருக்கும் வேலை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய முழக்கங்களோடு இன்று வரை எவ்வித சமரசம் என்று இந்திய நாட்டின் கல்வி வளாகங்களில் தன்னுடைய கிளையை பரப்பி மாணவருக்கான அரசியல் ஆயுதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் கல்வி வளாகங்களில் மாணவர் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் கருவியாகவும், தீர்வாகவும் உள்ளது. உலகில் நடைபெறும் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிரான முழக்கமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சாதி மத இன மொழி நிற பாலின பேதமற்ற சமத்துவ அரசியலைக் கொண்டு மாணவர்கள் மத்தியில் படிப்போம் போராடுவோம் என்று உயரிய முழக்கத்துடன் களமாடி வரக்கூடிய பேரமைப்பு மாணவர் பெருமன்றம்.

தற்போது ஆட்சியில் உள்ள ஒன்றிய மோடி அரசால் கல்வி வளாகங்களில் உருவாக்கப்பட்ட வரும் மதவெறி கலாச்சாரத்திற்கு எதிராகவும், தனியார்மய கல்வி முறைக்கு எதிராகவும், பல்வேறு வகையான கல்வி விரோத செயல்களுக்கு எதிராகவும் ஜனநாயகம், சமதர்மம் விஞ்ஞான சோசலிசம் என்ற மாற்றுக் கருத்துகளை எழுப்பி வீரமிக்க போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.

அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!
அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம்!

அணி திரள்வோம்!

ஒரு கை எழுப்பும் ஓசையை விட ஒரு கூட்டம் எழுப்பும் ஓசை சக்தி வாய்ந்தது அது போல் தான் தனியாய் குரல் கொடுப்பதை விட ஒரு அணியாய் குரல் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். இதற்கு நிகழ்கால சாட்சியம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குறுகிய நாளில் கூடிய பல லட்சக்கணக்கான மாணவர் கூட்டம் ஒரு சட்டம் இயற்ற மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் அதே நேரம் அதைவிட முக்கிய பிரச்சினையான நீட்டிற்கு ஏன் மாணவர்கள் அணி திரளவில்லை, ஏனென்றால் நமக்கு எது தேவை என்று நமக்கு தெரியவிடக்கூடாது என்பதை கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் பார்த்துக்கொள்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இளைஞர்களும் மாணவர்களும் உள்ள நாட்டில் அரசியல் பழகி அமைப்பாய்த் திரளா விட்டால் வருங்கால தலைமை என்பது கேள்விக்குறியாகிவிடும். அரசியலில் பிழைகள் மட்டுமே தொடருமே தவிர அறம் கூற்றாக மாற வாய்ப்பு ஏற்படாது.

இந்த நிலையில் கட்டணமில்லா கல்வி மதவெறிக்கு இடம் இல்லா கல்வி வளாகம் என்ற உயரிய முழக்கத்தோடு பிப்ரவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பல்வேறு விதமாக கல்வி வளாகங்களில் நடைபெறும் அடக்குமுறைகளையும், ஆதிக்கங்களையும், அநீதிகளையும் பற்றி விவாதிப்பதோடு அதற்கான தீர்வு பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டில் மாணவர் நலன், மக்கள் நலன், நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளது.

மேலும் மாநாட்டில் முதல் நாள் பிப்ரவரி 5 மாலை 5 மணி அளவில் வடசென்னை பகுதியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரள்வோம். அமைப்பாய்த் திரள்வோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

படிப்போம்!
போராடுவோம்!!

– க.இப்ராகிம்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.