அண்ணாவை மறந்த அதிமுகவினர்…

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.

நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் அன்னதானம் மற்றும் சேலை வழங்கப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அண்ணா சிலை அருகிலேயே நடைபெற்ற விழாவில் அண்ணாவை மதிக்கும் வண்ணம் ஒரு சிறு மாலை கூட அணிவிக்காமல் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

Thuraiyurஅப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கட்சியின் பெயர்.

குறைந்தது பெயரளவிற்காவது அண்ணா சிலைக்கு ஒரு மாலை அணிவித்து இருக்கலாம் என புலம்பி சென்றனர். ஏற்கனவே துறையூர் நகரப் பகுதியில் அதிமுகவினரிடையே உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது தேர்தல் நேரம் என்பதால் மற்ற கட்சியினர் எந்த ஒரு விஷயத்தையும் மறக்காமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில் , தற்போது நடந்த இச்சம்பவம் அதிமுக வின் சீனியர் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.