அங்குசம் சேனலில் இணைய

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு வாசகர் வட்ட கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வணக்கம் வாழ்க வளமுடன் வாசகர் வட்ட பெருமக்களே. 21/6/2025 சனிக்கிழமை அன்று மாலை 4 40 மணி அளவில் நடைபெற்ற வாசகர் வட்ட கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

கொஸ்மொய்தீன் அவர்கள் முன்னிலை வகித்து இக்கூட்டத்தினை  சிறப்பாக நடத்தி வைத்தார் .

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இக்கூட்டம் தொடக்கத்தில் வாசகர் வட்ட உறுப்பினர் ஆக இருக்கும் தமிழரசி அவர்கள் தமிழைப் பற்றி அழகான பாடல் பாடி தொடங்கி வைத்தார்.

வாசகர் வட்ட கூட்டம் அன்று யோகா தினம் ஆனதால்,  யோகா மற்றும் தியானம் உடற்பயிற்சி பற்றி நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர்  செல்லம் பாலசுந்தரம்  அருமையாக அமைதியாக உரையாடினார் .

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உடலும் உள்ளமும்

அமைதி பெற்றால் ..

எதிர்பார்ப்புகளுக்கு

இடமில்லை …

இருப்பதை வைத்து

திருப்தி அடைந்து

அழகாய் வாழ்கையில் வெற்றி

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

பெறலாம் ..

அதற்கு முக்கியத்துவம் மன அமைதி தரும் தியானம் பயிற்சி மற்றும் உடல் வலிமை பெறும் யோகா உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதனை அழகாய் எடுத்துரைத்தார்.

வாசகர் வட்ட கூட்டம் அடுத்து புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் நமது வாசகர் வட்ட நெறியாளர்  அய்யம்பிள்ளை அவர்கள் ஒரு புத்தகம் . மனிதனை எவ்விதம் பக்குவப்படுத்தி மனிதனை மனிதனாக்கும் என்பதனை அழகாய் எடுத்துரைத்தார்.

வாழ்கை  அழகான அறிவான சீரிய நெறிமுறையில் வாழ்வதற்கு நமக்கு சமுதாயத்தை சீர்திருத்திய அழகான தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றிய புத்தகங்கள் தினமும் சிறிது நேரம் படிமங்கள் என்றார் …

நமக்கு தூக்கம் தருகின்ற புத்தகங்கள் அழகாய் பெட்டியில் வைத்து விடுங்கள் என்று புத்தகங்கள் பற்றி அருமையாக உரையாடினார். அடுத்து நமது பேராசிரியர் மற்றும் தமிழ் புலவர் மற்றும் நமது வாசகர் வட்ட  சீரமைப்பாளர்  லட்சுமணன் அய்யா அவர்கள் ஒரு புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் திருவள்ளுவர் முதல் சங்கத்தமிழ் ஏற்றிய  பதினொன் கீழ் கணக்கு  புத்தகங்கள் அகநானூறு  பெரியபுராணம், கம்பராமாயணம் .

தெய்வங்களின் செய்யுள் வடிவத்தோடு அழகான விளக்கங்களும் அறிவாய் இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் . நகைச்சுவையோடு அழகாய் எடுத்துரைத்தார் ..

வாசகர் வட்ட கூட்டம் அடுத்து நமக்கு புதன் கிழமை தோறும் யோகா பயிற்சி மற்றும் தியானம் வழங்கி கொண்டிருக்கும் ஹாட் புல்னஸ் யோகா பயிற்சியாளர் திருமதி ஹேமா அவர்கள் அழகாய் அமைதியாய் தியானத்தில் அனைவரையும் மூழ்க செய்தார் ..

அடுத்து நமது நூலகத்திற்காக  நன்கொடையாக பாவலர் பெருஞ்சித்திரனார் அவர்களின் 16 தொகுப்பு புத்தகங்களை வழங்கிய  சக்திவேல் அய்யா அவர்கள் நமது நூலகத்தில் மாணவர்களை உறுப்பினராக சேர்க்கும் வகையில் ரூபாய் 1500  வழங்கி மீண்டும் சிறப்பித்தார்.

வாசகர் வட்ட கூட்டம் இதனை பாரதிதாசனின் பழ்கலை கழக பேராசிரியர் கோவிந்தராஜ் அய்யா அவர்கள் மூலம் வழங்கி சிறப்பித்தார் ..

அவர்கள் இருவருக்கும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் நூலகத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.

இந்நிகழ்ச்சி தேநீரூடன் சிறப்பாக நடைபெற உதவிய  நேரு சார், தியாகராஜன் சார், சுந்தர குமார் சார் ஆகியோருக்கு மகத்தான நன்றிகள். இறுதியில் நமது நூலகர்   ஒத்துழைப்பு நல்கிய அனைத்து வாசகர் வட்ட பெருமக்களுக்கும் நன்றிகள் உரைக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.