விருதுநகர் – மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழப்பு !
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, முத்துராமலிங்கபுரம் புதூரை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி (33) இவர் திருச்சுழி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தின் போது அந்த பகுதியில் லேசான மழை பெய்து வந்தது இதனால் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள வேப்ப மரம் நிழலில் தனது இருசக்கர வாகனத்துடன் சக வழக்கறிஞர்களுடன் முனியசாமி பேசி வந்துள்ளார்.

திடீரென வழக்கறிஞர் முனியசாமிக்கு போன் ஒன்று வந்துள்ளது, இதை எடுத்து பேசிய போது சற்றும் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் முனியசாமி உயிரிழந்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த மின்னல் தாக்குதலில் உடன் இருந்த மஞ்சம் பட்டியைச் சேர்ந்த பிச்சை(40) சேகர் (25) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த வழக்கறிஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.