சுடுகாட்டில் பதுக்கிய 11 கிலோ கஞ்சா! வளைத்து பிடித்த போலீஸ் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோவில்பட்டியில் விற்பனைக்காக சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது – 11 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்றுள்ளனர். போலீசார் சென்றதும் சுடுகாட்டு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்து மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விசாரணையில் சுடுகாட்டுப் பகுதியில் விற்பனைக்காக  கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டி (32), கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (33) மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? தப்பி ஓடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.