பாட்டி அடித்துக் கொ*லை – பேத்தி சிறையில் அடைப்பு!
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், நங்கவரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மும்மாச்சிரெட்டிப்பட்டி கிராமத்தில், 29.07.2026 ஆம் தேதி மூதாட்டி ஒருவர் இறந்த சம்பவம் தொடர்பாக நங்கவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் முதல் தகவல் அறிக்கையின் படி விசாரணை மேற்கொண்டதில், இறந்த பாப்பம்மாள், (65), க/பெ சின்னசாமி, மும்மாச்சிரெட்டிப்பட்டி, புத்தூர், குளித்தலை, கரூர் என்பவரின் மகள் வழி பேத்தி சுகிதா (26), க/பெ மூர்த்தி என்பவர் வேலைக்கு செல்ல தனது கல்விச் சான்றிதழ் தேவைப்பட்டதால் கல்விச் சான்றிதழை பெறுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பாப்பம்மாள் மற்றும் அவரது மகள் மஞ்சுளா, ஆகியோர், சுகிதாவின் தாய் ராசாத்தியின் அனுமதி இல்லாமல் சான்றிதழ்களை வழங்க முடியாது எனக் கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுகிதா ஸ்குரு டிரைவரால் பாப்பம்மாளின் தலையின் பின்புறம் மற்றும் கழுத்துப் பகுதியில் தாக்கியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும், மஞ்சுளா என்பவருக்கும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணைக்காக நங்கவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சுகிதாவை 31.07.2026 ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.