பகுதி செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வட்ட செயலாளர்கள் -திருச்சியில் உள்ளூர் கலாட்டா !
திருச்சி திமுகவில் நிர்வாக செயல்பாட்டிற்காக மாவட்டங்களுக்குள் பல்வேறு ஒன்றியங்கள், பகுதிகள், வார்டுகள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிர்வாக செயல்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயலாளருக்கு எதிராக அவர் பகுதிக்குட்பட்ட வட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம்.
ஏன் இந்த பிரச்சினை என்று கேட்கும் பொழுது, சமீபத்தில் ஒரு காண்ட்ராக்டில் கிடைத்த பணத்தை அந்த பகுதியின் வட்ட செயலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவில்லையாம், இதுதொடர்பாக அந்த வட்ட செயலாளரிடம் கேட்டதற்கு பணம் எல்லாம் தர முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்த வட்ட செயலாளர், பகுதி செயலாளர் வீடு அமைத்து இருக்கக்கூடிய பகுதிக்குச் சென்று பகுதி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார், மேலும் அப்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவருக்கு மூஞ்சி உடைந்து ரத்தவெள்ளத்தில் காணப்பட்டாராம்.
இதையடுத்து அந்த பகுதி செயலாளரின் பகுதிக்குட்பட்ட 10 வட்ட செயலாளர்களில் 7 வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளருக்கு எதிராகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்களாம். இதனால் அந்தப் பகுதி திமுகவில் பரபரப்பு நிலவுகிறது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கிடைத்திருக்கிறதாம்.
இது மட்டும் இல்லாது அந்த பகுதி செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் தன்னை மேயர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். இந்த நிலையில் தான் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு இடத்தின் பெயரை முதலாகக் கொண்ட இந்த பகுதி செயலாளருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.