‘லோகா சேப்டர்-1 சந்திரா’ சக்சஸ் மீட் நியூஸ்!
மலையாள ஹீரோ துல்கர் சல்மானின் ‘வேஃபெரெர் பிலிம்ஸ்’ சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரித்த ‘லோகா சேப்டர்-1 சந்திரா’ என்ற படம் கடந்த வாரம் தென்னக மொழிகள் அனைத்திலும் ரிலீசானது. தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணியது. இந்த ஒரு வாரத்தில் மொத்தம் 100 கோடியை வசூலித்து ஹிட்டடித்துள்ளதால், துல்கர் சல்மான் தலைமையிலான படக்குழு தென்மாநிலங்களுக்கு விசிட்டடித்து நன்றி சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் சென்னையில் செப்டம்பர்.04-ஆம் தேதி சக்சஸ் மீட் நடந்தது.
இந்த மீட்டில் துல்கர் சல்மான், படத்தின் டைரக்டர் டொமினிக் அருண், ஹீரோயின் கல்யாணி பிரிதர்ஷன், ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, படத்தில் நடித்த நஸ்லென், சந்துசலீம்குமார்,அருண் குரியன், தமிழ் வசனகர்த்தா ஆர்.பி.பாலா, கூடுதல் திரைக்கதை எழுதிய சாந்தி பாலசந்திரன், கேமராமேன் நிமிஷ் ரவி, ‘வேஃபெரெர்’ அனூப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சக்சஸுக்கு நன்றி சொல்லிப் பேசியவர்கள்…

சந்து சலீம்குமார்,
“இந்தப் படத்தை இந்தளவுக்கு எடுத்துச் சென்ற மீடியாக்களுக்கும் நண்பர் துல்கர் சல்மான், டைரக்டர் டொமினிக் ஆகியோருக்கு நன்றி”
ஆர்.பி.பாலா,
“முப்பது வருடங்களுக்கு மேலாக டப்பிங் வசனம் எழுதி வருகிறேன். இந்தப் படத்திற்கு நான் முதலில் எழுதிக் கொடுத்ததை ஏற்காமல் திருப்பி அனுப்பினார் டைரக்டர். மீண்டும் அவர் கேட்டபடி எழுதிக் கொடுத்ததும் ஒத்துக் கொண்டார். துல்கருடன் இதற்கு முன் சில படங்களில் வேலை பார்த்துள்ளேன். ஒருமுறை தான் டயலாக் கேட்பார், ஒரே டேக்கில் பேசிவிடுவார். அற்புதமான நடிகர். இந்தப் படத்தின் ஹீரோன்னா அது கேமராமேன் நிமிஷ்ரவி தான். ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் அளவுக்கு தனது திறமையை நிரூபித்துள்ளார்”
நஸ்லென்,
“காலையில சூர்யா சாரும் ஜோதிகாமேடமும் போன் பண்ணி வாழ்த்துகிறார்கள். இதுபோல பலரும் வாழ்த்துகிறார்கள். என்ன நடக்குதுன்னே தெரியல. அந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கேன்”.
சாந்தி பாலச்சந்திரன்,
“நாங்களே பார்த்து சந்தோஷப்படும் படத்தைத் தர விரும்பினோம். இப்போதும் எல்லோரும் பாராட்டுகிறார்கள். டைரக்டர் டொமினிக்குடன் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை டொமினிக் தான் சொன்னார். அவரின் எண்ணத்திற்கு ஏற்ப எல்லோரும் கடுமையாக உழைத்தோம். இந்தப் படத்திற்கு ஆதரவளித்த மீடியா நண்பர்களுக்கு நன்றி. இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எழுத ஆரம்பித்துள்ளோம்”

ஐஸ்வர்யா கல்பாத்தி,
“லோகாவின் டிரெய்லரைப் பார்த்ததுமே நாங்கள் ரிலீஸ் பண்ண முடிவு செய்துவிட்டோம். எங்களுடன் துல்கர் சல்மான் இணைந்ததற்கு நன்றி, மீடியாக்களுக்கு நன்றி”
அனூப்குமார்,
“இந்தப் படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாக்களுக்கு நன்றி”.
நிமிஷ் ரவி,
“சென்னையில் தான் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். இப்ப மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. சின்ன ஐடியாவாக ஆரம்பித்து இண்டிபெண்டெண்ட் மூவியாகத் தான் எடுக்க நினைத்தோம். துல்கர் சல்மானால் வளர்ந்து இப்போது பிரம்மாண்ட படமாகி ஹிட்டடித்துள்ளது”

கல்யாணி பிரியதர்ஷன்,
“எங்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இப்படத்தில் நான் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கப் போறேன்னு அப்பாகிட்ட சொன்னதும், “பார்த்தும்மா கால்-கை ஜாக்கிரதை” என எச்சரித்தாலும் வாழ்த்தினார்”
டொமினிக் அருண்,
”இந்தப் பயணம் மிக நீண்ட இனிய பயணம். இதை ஏற்படுத்தித் தந்த துல்கர் சல்மானுக்கும் இப்படத்தை கொண்டாடிய மக்களுக்கும் நன்றி”.
துல்கர் சல்மான்,
“நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஒரு டீச்சராக பசங்களைக் கூட்டி வந்துள்ளேன். நாங்கள் இதை கேரளாவில் மட்டும் ரிலீஸ் செய்வதாகத் தான் இருந்தோம். ஏஜிஎஸ் ஐஸ்வர்யா தான் தமிழ்நாட்டிலும் பிற மாநில மொழிகளிலும் ரிலீஸ் பண்ணும் ஐடியாவைக் கொடுத்தார். அவருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்தவர்களுக்குத் தான் இந்த வெற்றி போய் சேரும். கதை சொன்ன மறுநாளே டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார் கல்யாணி. இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த ’லோகா’வை ஐந்து பாகங்களாக எடுக்க ப்ளான் பண்ணியுள்ளோம். இன்னும் சிறப்பாக செயல்படுவோம்”.
— ஜெடிஆர்