அங்குசம் பார்வையில் ‘லோகா சேப்டர்-1 சந்திரா’
தயாரிப்பு : வேஃபேரெர் பிலிம்ஸ் துல்கர் சல்மான், தமிழ்நாடு ரிலீஸ் : ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட், டைரக்ஷன் : டொமினிக் அருண், ஆர்ட்டிஸ்ட் : கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சலீம் குமார், சாண்டி, டொவினோ தாமஸ், அருண் குரியன், ஒளிப்பதிவு ; நிமிஷ் ரவி, இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் : சாமன் சாக்கோ, ஸ்டண்ட் ; யானிக் பென், தமிழ் வசனம் : ஆர்.பி.பாலா, தயாரிப்பு வடிவமைப்பு ; பங்களான், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஜாம் வர்கீஸ், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.
மரணமே இல்லாத சூப்பர் ஹீரோ[யின்] கதை தான் இந்த ‘லோகா சேப்டர்-1 சந்திரா’. சூப்பர் ஹீரோவாக கல்யாணி பிரியதர்ஷனின் இண்ட்ரோவே அதிரடியாக இருக்கிறது. யாரோ ஒருவர் சந்திராவுக்கு [கல்யாணி பிரியதர்ஷன்] போன் பண்ணி சில கட்டளைகள் இடுகிறார். அதன் பின் ஒரு பிளாட்டில் குடியேறுகிறார் கல்யாணி. அங்கே எல்லாமே மர்மமாக இருக்கின்றன. எதிர் பிளாட்டில் இருக்கும் நஸ்லென் உட்பட சில இளைஞர்கள் சந்திராவை வட்டமிடுகிறார்கள். ஒரு நாள் இளைஞர்களின் நைட் பார்ட்டி நடக்கும் போது அங்கே வந்து ஃப்ரண்ட்ஷிப்பாகிறார் சந்திரா. இவரைப் பார்த்ததும் அங்கே இருக்கும் வளர்ப்புப் பூனை ஒன்று வித்தியாசமாக கத்துகிறது.
பார்ட்டி நடக்கும் போது இன்ஸ்பெக்டர் சாண்டி வருகிறார். சந்திராவை முறைக்கிறார், கிளம்பிச் செல்கிறார். பார்ட்டி முடிந்ததும் இளைஞர்களிடம் கைகுலுக்கி விடை பெறுகிறார் சந்திரா. இரவில் சில அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார் கல்யாணி. இந்த நிலையில் தான் கேரளாவில் மனித உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல் பற்றிய செய்தி சேனல்களில் ஃப்ளாஷ் ஆகிறது.
சிறுமியின் உடலில் நீலி என்ற பெண் தெய்வத்தின் சக்தி புகுந்த பின் இந்த அதிசயம் நடக்கிறது. அந்த நீலியின் இப்பிறவி தான் சந்திரா [ கல்யாணி பிரியதர்ஷன்].
சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன் அமர்க்களம் பண்ணியுள்ளார். ஆக்ஷன் சீக்வென்ஸில் அதகளம் பண்ணியுள்ளார். படத்தில் மொத்தமே மூன்று சீன்களில் தான் லேசாக சிரிக்கிறார். மற்றதெல்லாம் ஆக்ரோஷம் தான். சந்திராவை ஒன்சைடாக லவ் பண்ணும் நஸ்லென், ஒரு கட்டத்தில் சந்திராவின் இன்னொரு முகத்தைப் பார்த்ததும் பயந்து நடுங்கி மயக்கம் போட்டு, அதன் பின் தெளிந்து சந்திரா சொல்படி கேட்பது என நன்றாகவே ஸ்கோர் பண்ணியுள்ளார் நஸ்லென்.
பழங்குடியினச் சிறுமியாக, பெண் காவல் தெய்வம் நீலியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. “யேய்….என ஆங்காரமாக கத்திக் கொண்டு ராஜாவின் ஆட்களை வேட்டையாடி கதிகலங்க வைத்துவிட்டார். அந்த சிறுமியின் கண்களை ரொம்பவே பவர்ஃபுல்லாக காட்டியிருக்கார் டைரக்டர் டொமினிக் அருண். பழங்குடியின சிறுமியின் ஆக்ஷனையும் இப்போதைய சந்திராவின் ஆக்ஷனையும் கட் பண்ணி, கட் பண்ணி கரெக்டாக மேட்ச் பண்ணி அசத்திவிட்டார் டைரக்டர்.
இந்த சிலிர்ப்பு அனுபவமெல்லாம் இடைவேளை வரை தான். அதன் பின் தெலுங்குப் பட பாலையா சினிமாவில் வருவது போல மார்டன் மிஷின் கன்னால் சகட்டுமேனிக்கு எல்லோரையும் சுட்டுத் தள்ளுகிறார் கல்யாணி. அட ஏய்யா சந்திராவை வச்சு எங்களை சாகடிக்கிறங்கிற ரேஞ்சுக்கு நம்மளை டென்ஷனாக்கிட்டார் டைரக்டர். இதைவிடக் கொடுமை மேஜிஷியன் டொவினோ தாமஸ் வந்த பின் நடக்கும் கேலிக்கூத்துக்கள் தான்.
கேமராமேன் நிமிஷ் ரவியும் ஆர்ட் டைரக்டர் பங்களானும் செமத்தியா வேலை பார்த்திருக்கிறார்கள். அதிலும் அந்த பழைய ஆஸ்பத்திரி செட், கல்யாணி வீட்டின் ரகசிய அறை இதெல்லாம் பங்களானின் பக்கா ஒர்க்கிற்கு சாட்சி.
இந்த ‘சேப்டர்-1’-ன் க்ளைமாக்ஸில் எண்ட்ரியாகியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான். பார்ப்போம் அடுத்த சேப்டராவது நல்லாயிருக்குமான்னு..
— மதுரை மாறன்