அங்குசம் பார்வையில் ‘லவ் மேரேஜ்’ 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘அஸ்யூர் பிலிம்ஸ்’ & ’ரைஸ் ஈஸ்ட்’  டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ , ஸ்ரீநிதி சாகர். டைரக்‌ஷன் : சண்முக பிரியன். ஆர்ட்டிஸ்ட் : விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், கஜராஜ், ரமேஷ் திலக், முருகானந்தம், அருள்தாஸ்,   சத்யராஜ் [ஒரே ஒரு சீன் ]. ஒளிப்பதிவு : மதன் கிறிஸ்டோபர், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : பரத் விக்ரமன், தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

இருபத்தஞ்சு பொண்ணுகள் பார்த்தும் கல்யாணம் கைகூடவில்லை 33 வயதாகும் உசிலம்பட்டி இராமசந்திரனுக்கு. இவருக்கு ஜாதகம் சரியில்லை என்பதால், உள்ளூரில் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் ராமுவின் அப்பாவான கஜராஜின் உறவினர்கள். இதனால் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேறு சாதியைச் சேர்ந்த அம்பிகாவை [ சுஷ்மிதா பட்] பெண் பார்க்கப் போகிறார்கள். போனவுடனே பேசி முடித்து நிச்சயமும் செய்துவிட்டு, கிளம்பும் போது, பஸ் ரிப்பேராகிவிட, அன்று இரவு அனைவரும் பெண் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர். மறுநாள் கிளம்பும் போது கொரோனா லாக்டவுன் போட்டுவிட, வேறு வழியே இல்லாமல் அங்கே இருக்க வேண்டிய சூழல். நிச்சயமும் பண்ணியாச்சு, அதனால வந்த இடத்துலேயே கல்யாணத்தை முடிச்சிரலாம் என ப்ளான் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அன்று இரவு தனது காதலுடன் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார் அம்பிகா.

Sri Kumaran Mini HAll Trichy

‘லவ் மேரேஜ்’
‘லவ் மேரேஜ்’

அதன் பின் நடக்கும் அதகளமும் ராமுவுக்கு யாருடன் கல்யாணம் நடந்துச்சுங்கிறதுக்கான க்ளைமாக்ஸும் தான் இந்த ‘லவ் மேரேஜ்’.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படத்தின் ஆரம்பக் காட்சிகள், அதாவாது சுஷ்மிதாவைப் பெண் பார்த்து பேசி முடிக்கும் வரை டிவி சீரியல் டைப்பில் இருக்கிறது. ஆனால் சுஷ்மிதா எஸ்ஸான பிறகு அங்கங்கே காமெடி, அவ்வப்போது சாதி வெறி, அம்பிகாவின் தங்கையான ராதா [ மீனாட்சி தினேஷ்]வுடன் விக்ரம் பிரபுவுக்கு ஏற்படும் லவ் இதெல்லாமே கோபிச்செட்டிபாளையம் போல பச்சைப் பசேலென மனதில் ஒட்டிக் கொள்கிறது. அதேபோல் எந்த சீனிலும் ஆபாசமோ, விரசமோ, காட்டுக்கூச்சலோ இல்லாமல் படத்தை நகர்த்தியிருப்பதற்காக டைரக்டர் சண்முக பிரியனுக்கு சபாஷ் போடலாம்.

Flats in Trichy for Sale

இராமசந்திரனாக விக்ரம் பிரபுவுக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த லவ் மேரேஜ் தான் கச்சிதமாக மேட்ச் ஆகியிருக்கு. சுஷ்மிதாவுடன் பேச முயற்சிக்கும் சீன், சரக்கடித்துவிட்டு ஃபுல் மப்பில் கோபமாகும் சீன், “33 வயசாகியும் கல்யாணம் ஆகலைன்னா நான் ஏம்பா கவலைப்படணும்” என அப்பா கஜராஜிடம் கொந்தளிக்கும் சீன் மீனாட்சி தினேஷின் பேச்சில் உருகும் சீன் இவற்றிலெல்லாம் விக்ரம் பிரபு வெகு ஜோர்.

‘லவ் மேரேஜ்’  ஹீரோயின் சுஷ்மிதா பட்டைவிட, மீனாட்சி தினேஷ் தான் நம் மனதில் பச்செக்கென ஒட்டிக் கொள்கிறார். பார்க்க பாந்தமாக சாந்தமாக இருக்கிறார். நடிப்பிலும் பல சீன்களில் ஸ்கோர் பண்ணுகிறார். சாதி வெறியராக விக்ரம் பிரபுவின் மாமாவாக அருள்தாஸ், கலகலப்பான போட்டோகிராபராக ரமேஷ்திலக், சுஷ்மிதாவின் தாய்மாமனாக வரும் முருகானந்தம், கல்யாண புரோக்கராக வரும் நபர் என அனைவருக்கும் நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் டைரக்டர். உசிலம்பட்டின்னா பெண் குழந்தைகளை வெறுப்பதை நச்சுன்னு ஒரு சீனில் வைத்துவிட்டார் சண்முக பிரியன்.

ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் ‘லவ் மேரேஜுக்கு’ ஜில் எஃபெக்ட் கொடுக்கிறது.

அரேஞ்டு மேரேஜ் ஃபெயிலியனாவர்கள், லவ் மேரேஜ் சக்சஸானவர்கள், இரண்டும் சரி தான் எனச் சொல்பவர்கள் இந்த ‘லவ் மேரேஜ்’ ஐ விரும்பிப் பார்க்கலாம்.

 

—    மதுரை மாறன்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.